Monday, June 18, 2018

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்!!!

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்!!!

எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.

ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்....

இனி, உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகளை பற்றி பார்க்கலாம்...

வாழைப்பழம் நம்மில் நிறை பேர் இரவு உணவை முடித்துவிட்டு ஓரிரு வாழைப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

ஓட்ஸ் உணவு ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.

தானிய உணவுகள் தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்

முட்டை இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்

நொறுக்கு தீனிகள் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அறவே மறக்க வேண்டிய உணவுகள் என்றால் அது நொறுக்கு தீனிகள் தான். இதனால் தான் பெரும்பாலானவர்களின் டயட் சீர்குலைந்து போகிறது

கடின உணவுகள் இரவு நேரத்தில்... முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

மது இரவு நேரத்தில் மது அருந்துவது தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு நேரத்தில் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.

காபி சிலருக்கு காபி இல்லாத இரவும், பகலும் சாத்தியமற்றது. ஆனால், உண்மையில் இரவும் சரி, அதிகாலையும் சரி காபி குடிப்பது சரியான முறையல்ல. எனவே, முக்கியமாக இரவு தூங்கும் முன்பு காபியை பருக வேண்டாம். இரவு காபிக் குடிப்பதால், உங்களால் காலையில் விரைவாக எழ முடியாது

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!


இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!



இறைச்சி இல்லாத உணவில்லையெனில் இறந்துவிடும் அளவிற்கு துயரம் கொள்ளும் நபர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து. சாதாரணமாக வாரத்தில் ஓரிரு முறை இறைச்சி உணவை சாப்பிடுவது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக இருக்கும்

ஆனால், ஒரு சில ஜீவராசிகள் வாரத்தில் ஓரிரு நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களுமே தங்களுக்கு இறைச்சி உணவு வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது ஜுராசிக் பார்க்கில் டைனோசரைக் கட்டுப்படுத்துவதற்கு சமம்.

உணவுக் கட்டுப்பாடு என்று வந்தவுடன், முதலில் அனைவரும் ஒதுக்க சொல்லும் உணவு, இறைச்சி தான். சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி என எதையும் கையில் தொடவேக் கூடாது என்று தடைச்சட்டம் பிறப்பிக்கப்படும்.
ஆனால், நீங்கள் உணவுக் கட்டுப்பாடின் காரணமாகவோ அல்லது திடீரென புதுவருட கொள்கை, அது, இது என இறைச்சியை சாப்பிடுவதை நிறுத்தும் போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா...

உடல் சூடு குறையும் பெரும்பாலும் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் இறைச்சி உணவை கைவிடும் போது, உடல் சூடு குறையும். உடல்நிலையில் இலகுவான நல்ல மாற்றம் காண இயலும்

செரிமானம் சீராகும் இறைச்சி உணவுகள் கடின உணவு வகையை சார்ந்தவை. எனவே, செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆதலால், நீங்கள் இறைச்சி உணவை தவிர்க்கும் போது, செரிமானம் சீராகும்

சத்தான உணவு புரதம், இரும்பு, போன்ற உடல் வலிமைக்கு தேவையான சத்துகள் இறைச்சியில் மிகுதியாக கிடைக்கும். எனவே, நீங்கள் இறைச்சியை கைவிடும் போது, ரசம், சாம்பார் மட்டுமில்லாமல், அதற்கேற்ற சத்தான சைவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம்.

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!!!

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!!

கொழுப்பு உணவுகள், நொறுக்கு தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் என எத்தனையோ காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும் என நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தயிரை உட்கொள்ளும் முறையில் ஏற்படும் தவறினால் கூட உடல் எடை அதிகரிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

ஆம், தயிர் சாப்பிடும் போது நாம் செய்யும் சில சின்ன சின்ன தவறுகளால் கூட உடல் எடை தாறுமாறாக ஏற வாய்ப்புகள் இருக்கிறதாம். பொதுவாகவே பால் உணவுகளில் வெண்ணெய், நெய் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும் தன்மையுடையவை. இதில் தயிரும் அடங்கும் என கூறப்படுகிறது....

கலோரிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் முன்பு போல இப்பது நாம் பெரிதாய் உடலுக்கு வேலை கொடுத்து உழைப்பது கிடையாது. முன்பு மாடு போல உழைத்ததால் கிலோ கணக்கில் சாப்பிட்டாலும் அது உடலில் கொழுப்பாக தங்காது கரைந்துவிடும். 

ஆனால், இப்போது மாட்டின் சாணி போல, ஒரே இடத்தில் அமர்ந்து தான் பெரும்பாலானோர் வேலை செய்து வருகிறோம். ஆதலால், கொஞ்சம் அதிகமாக கலோரிகள் சேர்த்து சாப்பிட்டால் கூட உடல் எடையில் கசட்டு மேனிக்கு மாற்றம் ஏற்படும். 

ஒரு பாக்கெட்டு தயிரில் 100 கலோரிகளும், ஆறு கிராம் புரதமும் தான் இருக்குமாம். ஆனால், உங்களது மதிய வேளை உணவுக்கு தேவையே 200-350 கலோரிகள் தான். இதில் மொத்தமாக நீங்கள் தயிரை சேர்த்துக் கொள்வது உடல் எடை அதிகரிக்க செய்துவிடும்

பகுதிகளாக பிரித்து உண்ண பழகுங்கள் சிலர் மதிய உணவில் சாம்பாறம் ரசம், தயிர், பொரியல் என அனைத்தையும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இதில் தவறொன்றும் இல்லை. அனைத்து சத்துகளும் கிடைக்கும் எனிலும், ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாய் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். எனவே, சாம்பார், ரசம் மதியம் சாப்பிட்டுவிட்டு, மாலை வேளையில் தயிரை பருகலாம், அல்லது நீரில் கலந்து மோராக குடிக்கலாம். இது, உங்கள் உடலுக்கும் நல்லது

தயிரோடு மற்ற உணவுகளை கலந்து சாப்பிடுவது சிலர், தயிரை வெறுமென பயன்படுத்தாமல், அதில், பழங்கள், நுட்ஸ், பாதாம், போன்ற மற்ற உணவுகளையும் சேர்த்து ருசியாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது போல சாப்பிடும் போது நாள் முழுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரிகளை ஒரே வேளையில் உடலில் சேர்கிறது. இதனால் செரிமான சிக்கல்களும், உடல் எடை அதிகரிப்பும் தான் ஏற்படும்

கொழுப்பற்ற தயிர் இப்போது சந்தைகளில் ப்ளேவர்கள் சேர்க்கப்பட்ட தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் என நிறைய வகைகளில் தயிர்கள் கிடைக்கின்றன. இவற்றில் ருசிக்காக செயற்கை ப்ளேவர்கள் மற்றும் இனிப்பூட்டிகள் சேர்க்கின்றனர். இது, இவர்கள் நீக்கிய கொழுப்பை விட உடலுக்கு தீங்கானது

புரோபயாடிக்ஸ் பசியை தீர்க்கும் பண்புடையது புரோபயாடிக்ஸ். பல்வேறு ஆராய்சிகளும் கூட புரோபயாடிக்ஸ் மிகவும் நல்லது என்று கூறியிருக்கிறது. தயிர் புரோபயாடிக்ஸ் அதிகமுள்ள உணவாகும். பசியாக இருப்பவர்கள் தயிர் சாப்பிட்டால் உடனடியாக பசி அடங்கிவிடும்.

இதனால், அதிகம் தயிர் சாப்பிடுபவர்களும், தயிரையே டயட்டாக உட்கொண்டு சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், இது அதிகரிக்கும் போது, உடல் எடையும் அதிகரிக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது

ஃபாஸ்ட்புட்களோடு தயிரின் கலப்பு வட இந்தியர்கள் விற்கும் ஃபாஸ்ட்புட்களோடு தயிரும் கலந்து சில உணவுகள் விற்கப்படும். அதை தாஹி (Dahi - தயிர்) என்று பெயர் சேர்த்து விற்பார்கள். பொதுவாகவே ஃபாஸ்ட்புட், மற்றும் நொறுக்கு தீனிகள் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள், இவற்றோடு தயிரும் சேர்த்து சாப்பிடும் போது, உடல் எடை அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு

இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!!

இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!!


வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.

வெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.
பல நோய்களைக் குணப்படுத்த உதவும் வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால், நோய்களை விரைவில் குணமாக்கலாம் என்று இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது

இருமல் 15 வெற்றிலைகள் மற்றும் 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வெற்றிலையை நன்றாக அலசி நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை தேன் சேர்த்து அருந்தலாம்

மூச்சுக்குழாய் அழற்சி 7 வெற்றிலையை கற்கண்டு கொண்டு நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளர் ஆக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். இதனை தினமும் மூன்று வேளை எடுத்துக் கொள்ளவு

உடல் நாற்றத்தை அகற்ற 5 வெற்றிலையை எடுத்துக் கொண்டு இரண்டு கப் நீரில் கொதிக்க விட வேண்டும். ஒரு குவளை அளவாக அதனை வற்ற விட வேண்டும். அதனை மதிய வேளையில் குடித்து வரவும்


தீப்புண் சிறிதளவு வெற்றிலையை எடுத்து, அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக கசக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து, தீப் புண் பட்ட இடத்தில் போட வேண்டும்

மூக்கில் இரத்தம் வடிதல் கொழுந்து வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக கசக்கி சுருட்டி, மூக்கில் வைத்தால், மூக்கிலிருந்து இரத்தம் வருவது தடுக்கப்படும்

அல்சர் சிறிதளவு வெற்றிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அதனை நீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது சட்டியை சுற்றி உருவாகும் சிறிய வெற்றிலை துண்டுகளை எடுத்து, உருண்டைகளாக்கி தினமும் இரு முறை உட்கொண்டு வரவும்

கண் நமைச்சல் மற்றும் சிவந்த கண் 5-6 நற்பதமான, கொழுந்து வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அதனை ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். பின் ஆறியவுடன் அந்த நீரைக் கொண்டு தினமும் மூன்று முறை என குணமாகும் வரைக் கண்களைக் கழுவி வர வேண்டும்

புண் மற்றும் நமைச்சல் 20 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வெதுவெதுப்பாக புண் மற்றும் நமைச்சல் உள்ள இடங்களில் ஊற்றிக் கழுவவும்

ஈறுகளில் இரத்தத்தை நிறுத்துதல் நான்கு வெற்றிலையை இரண்டு கப் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வாயைக் கொப்பளிப்பதற்குப் பயன்படுத்தவும்

சீத பேதி 1-2 வெற்றிலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை வாயில் போட்டு நன்றாக சாறு வரும் வரை மென்று சாற்றினை விழுங்கி, பின் சக்கையை துப்பி விடவும்.

முகப்பரு 7-10 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனை சூடான நீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரு முறை முகம் கழுவவும்
வெள்ளைப்படுதல் 2.5 லிட்டர் நீரில் சுத்தம் செய்த 10 வெற்றிலையை கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரை பயன்படுத்தி வெதுவெதுப்பான சூட்டில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யவும்

தாய்ப்பால் அதிகரிப்பைக் குறைத்தல் சில வெற்றிலையை எடுத்து கழுவிக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் தடவி தீயில் நன்றாக வாட்டவும். வெதுவெதுப்பான நிலையில் மார்பகங்களில் உள்ள வீக்கங்களில் வைத்து ஒற்றி எடுக்கவும். இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்

காய்ச்சலுக்கான அட்டகாசமான 10 வீட்டு சிகிச்சைகள்!!!

காய்ச்சலுக்கான அட்டகாசமான 10 வீட்டு சிகிச்சைகள்!!!


ஃப்ளூ அல்லது தொற்றால் பாதிக்கப்படும் போது, அந்த தொற்றை எதிர்த்து நம் உடல் போராடும் வகை தான் காய்ச்சல். அதனால் காய்ச்சலை அமுக்க நினைப்பது தவறான ஒன்றாகும். ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்ளும். மேலும் காய்ச்சல் தான் உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும். இருப்பினும், காய்ச்சல் அதிகமாக இருப்பது ஆபத்தானது, அதை விட அதற்கு எடுக்கும் மாத்திரைகள். எனவே கடைகளில் விற்கப்படும் கண்ட மாத்திரைகளை போடும் பழக்கத்தை கைவிடுங்கள். ஏனெனில் அதிக காய்ச்சலை குறைப்பதற்கு எண்ணிலடங்கா இயற்கை சிகிச்சைகள் உள்ளது. இப்போது அதைப் பார்ப்போமா!

வினிகர் வெதுவெதுப்பான குளிக்கும் நீருடன் அரை கப் வினீகரை கலந்து அதில் 5-10 நிமிடம் வரை உட்கார்ந்து கொள்ளுங்கள்
கூனைப்பூ கூனைப்பூ தாவரத்தை கொதிக்க வைத்து, அது மென்மையாகும் வரை சமைக்கவும். இலைகளின் அடிபாகத்தை உண்ணவும்

துளசி ஒரு டீஸ்பூன் துளசி இலைகளை ஒரு கப் வெந்நீரில் சேர்த்து, அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதனை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை வரை குடிக்கவும். மறுநாளே அதிக காய்ச்சல் தானாக குறைந்துவிடும்

வெங்காயம் ஒவ்வொரு பாதத்திற்கு கீழேயும் ஒரு பச்சை வெங்காய துண்டை வைத்து, கால்களை வெதுவெதுப்பான கம்பளியால் மூடவும்

ஒத்தடம் வினீகர் கலந்துள்ள வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை முக்கிக் கொள்ளவும். அதிகமாக இருக்கும் காய்ச்சலை குறைப்பதற்கு, அந்த துணியை பிழிந்து, நெற்றியில் வைக்கவும்

கடுகு ஒரு கப் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அதன் பின் அதனை குடிக்கவும்.

உருளைக்கிழங்கு ஒரு உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி, அதனை வினீகரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீங்கள் படுத்து கொண்டிருக்கும் போது அந்த துண்டுகளை உங்கள் நெற்றியில் வைத்திடவும். அதன் மீது துணி ஒன்றை போட்டு விடவும். 20 நிமிடங்களில் பலனை நீங்கள் காணலாம்.

எலுமிச்சை பாதங்களுக்கு அடியில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்து, கால்களை ஈர சாக்ஸை கொண்டு மூடிக் கொள்ளவும். இதனை கம்பளி சாக்ஸ் கொண்டு மூடவும். மற்றொரு முறையும் கூட உள்ளது. அதன் படி, முட்டையின் வெள்ளை கருவில் இரண்டு சாக்ஸை போடவும். இதனை பாதத்திற்கு கீழ் வைத்து, அதனை சாக்ஸை கொண்டு மூடி விடவும்

ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் நசுக்கிய இரண்டு பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் தடவிடவும். பின் பாதங்களை ப்ளாஸ்டிக்கை கொண்டு மூடிடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். ஆலிவ் எண்ணெய்யும், பூண்டும் காய்ச்சலுக்கு மிக அற்புதமான வீட்டு சிகிச்சைகளாகும்

உலர் திராட்சை காய்ச்சல் அதிகமாக இருந்தால், 25 உலர் திராட்சையை அரை கப் நீரில் ஊற வைக்கவும். தண்ணீரில் உள்ள உலர் திராட்சையை கசக்கி, தண்ணீரை வடிகட்டவும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை அதனுடன் சேர்த்து, அதனுடன் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்

திங்கட்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசிப்பதால் என்ன நன்மை தெரியுமா?


திங்கட்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசிப்பதால் என்ன நன்மை தெரியுமா?


திங்கட்கிழமையன்று திருப்பதியில் ஏழுமலையால் எழுந்தருளியுள்ள மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும் என்பது ஐதீகம். இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால்தான் அங்கு சென்று வந்தாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.
திருப்பதி சென்று திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் தான் அரசியல்வாதிகளும், விஐபிக்களும், ஏழை, நடுத்தர மக்களும், பணக்காரர்களும் ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்திக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள்இருக்கு.அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதைபார்க்கலாம். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம்.
7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்னை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம் திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும் .
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார். கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை நீங்குவதோடு சந்ததி விருத்தி உண்டாகும்.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டடுள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம்.
திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு பிடிக்கும் லக்னம். மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் விருச்சிகம் , மகரம், மீனம். வருடம் ஒரு முறை செல்ல வேண்டிய லக்னம் காரர்கள் :சிம்மம் , தனுசு , கும்பம்.
7 மலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொருமலையும் ஏறி இறங்கும் போது தோஷம் பாவங்கள் நீங்கி விடும். திருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவார் பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார்.
ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம். சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி. அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்.
ஒவ்வொரு தமிழ் மாதம். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை கண் கூடாக பார்க்க முடியும்.12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் படிப்படியாக சென்று வர கண்டிப்பாக செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்துள்ளது.
ஜாதகத்தில் சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு ஏழுமலையான் ஆலயம் சிறந்த பரிகார தலமாகும். திருமலையில் திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். என்ன ஏழுமலையானை தரிசனம் செய்ய கிளம்பிட்டீங்களா?

மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வம் பெருக இதை செய்யுங்க

மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வம் பெருக இதை செய்யுங்க
காலை முதல் மாலை வரை உழைப்பது பணத்திற்காகத்தான். பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதுதான் பலரது எண்ணம். என்னதான் உழைத்தும் வீட்டில் பணம் தங்கவில்லையே என்பது பலரது கவலை. செல்வத்தின் அதிபதி மகாலட்சுமியின் கடைக்கண் நம்மீது விழாதா? என்று பலரும் ஏங்குகின்றனர்.
மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருக என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். வீட்டில் தினமும் மாலையில் விளக்கேற்றி கனகதாராஸ்தோத்திரம் படித்தால் பொன்மழை பொழியும் லட்சுமியின் அருள் கிடைக்கும். இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும்.
ஏழைப்பெண் ஒருத்தி இட்ட உலர்ந்த நெல்லிக்கனியை அவளுடைய பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார். அவள் வீட்டில் பொன்மழை பொழிந்தது. காஞ்சியில் ஒரு சமயம் காமாட்சி தேவி பொன்மழை பொழிந்ததாக மூக சங்கரர் என்பவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தண்ணீர் குடிக்கத் தரவும் அவர் கிளம்பும் போது பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும். 
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். அபிஜித் நட்சத்திரத்தில் அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். 
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய பணம் அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க வறுமை விலகி பணம் கிடைக்கும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் வறுமை விலகும்.
தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
 குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும். வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
 ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். கருநெல்லி மரம் வளர்த்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். வேம்பு, வில்வம் வளர்த்தால் செல்வம் சேரும்.
அதே போல குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் போற்றப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை. இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். வறுமை, கடன் தொல்லை யாவும் நீங்கும். 
தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்

வாஸ்து தோஷங்கள் நீக்கும் வலம்புரி சங்கு - வீட்டில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள்

வாஸ்து தோஷங்கள் நீக்கும் வலம்புரி சங்கு - வீட்டில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள்

திருமகளின் அம்சமாகவே இருக்கும் வலம்புரிச் சங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் அற்புத சின்னமாகும். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது மூத்தோர் வாக்கு.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தார் அவருடனே தோன்றியது இந்தச் சங்கு. அதனை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார் மகா விஷ்ணு. 'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது.
புதுமனை வாங்கி அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் நன்றாக வாழ்ந்தாலே கண் திருஷ்டியால் வியாபாரச் சரிவு ஏற்படும். கடன்கள் தொழில் கூடங்களில் தொய்வு சிலருக்கு ஏற்படும். இதை போக்கவல்லது வலம்புரி சங்கு. 
எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்கவல்ல அற்புத சங்கு, வலம்புரிச் சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும். 
கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள். 
திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.
தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது.
விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.
அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.
கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.
பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும். ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும்.
ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள்.
சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.
சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது.
வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால்,சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.
ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி எல்லாம் சங்கு பூஜை செய்வதற்கு உரிய நாள்கள். வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது.
வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும், நினைத்த காரிய வெற்றி உண்டாகவும், ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் வலம்புரிச் சங்கின் வழிபாடு இல்லத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். இவ்வலம்புரிச் சங்கு, சாஸ்திரிகளால் ஒரு மண்டலம் உருவேற்றப்பட்டது. உயிரோட்டமும் சக்தியும் கொண்ட வலம்புரிச் சங்கு மிகுந்த சிறப்புடையது.
வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம். வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.