Friday, November 23, 2018

குழந்தைக்கு சரியான முறையில் மசாஜ் செய்வது எப்படி? - PART 2

குழந்தைக்கு சரியான முறையில் மசாஜ் செய்வது எப்படி? - Part 2


மசாஜ் என்பது உங்கள் குழந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் காதலோடு எடுத்துச் சொல்லும் வழியாகும். குழந்தை மட்டுமல்லாது நீங்களும் அதனால் அமைதி பெறுவீர்கள். ஒத்திசைவோடு, மென்மையான மற்றும் அமைதிப்படுத்தும் வகையில் செய்யப்படும் மசாஜ், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்ல உணர்வுகளை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும்.

உங்கள் இருவர் போக, உங்கள் கணவன் இதை பார்த்துக் கொண்டிருந்தால் அவரும் அந்த உணர்வை உணரலாம். மசாஜ் செய்யும் போது குழந்தையின் நோய் தடுப்பாற்றல் அமைப்பு மேம்பட்டு, அமைதியை உண்டாக்கி, உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தம் வலுபெறும்.

பல தாய்மார்கள் பயப்படுவதை போல் குழந்தைக்கு மசாஜ் செய்வது என்றால் பெரிய காரியம் அல்ல. அதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு 10 வழிகளை உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.

கால்கள்
குழந்தையின் கால்களில் இருந்து மசாஜை தொடங்குங்கள். அதற்கு காரணம், மற்ற உறுப்புகளுடன் ஒப்பிடுகையில், கால்கள் குறைந்த கூச்சமுடைய பகுதியாகும். உங்கள் இரண்டு கைகளும் எண்ணெய்யை தடவி, குழந்தையின் தொடை பகுதியை கைகளால் மூடிக்கொள்ளுங்கள். பின் ஒரு கை மாற்றி மற்றொன்றாக குழந்தையின் கால் முழுவதும் மென்மையாக நீவி விடுக.ஒரு கால் மாற்றி மற்றொன்றாக இதனை தொடர்ந்து செய்யவும்.

பாதங்கள்
ஒரு பாதத்தை உங்கள் கைகளில் எடுத்து ஒவ்வொரு திசையிலும் அதனை மெதுவாக திருப்பவும். இதனை 4-5 நிமிடங்கள் வரை செய்யவும்.பின் கணுக்காலில் இருந்து நுனிப்பாதம் வரை நீவி விடவும். பின் இதையே மற்றொரு பாதத்திற்கும் செய்யவும். உள்ளங்கால் உங்கள் பெருவிரல்களால், குழந்தையின் உள்ளங்காலில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

நுனிப்பாதம்
குழந்தையின் ஒவ்வொரு நுனிப்பாதத்தையும் உங்கள் முன் விரல்கள் மற்றும் பெருவிரலுக்கு மத்தியில் வைத்து, உங்கள் விரல்களை நுனிப்பாதங்களின் மீது மென்மையாக நீவி விடவும். இரண்டு கால்களிலும் இதனை செய்யவும்.

கரங்கள்
குழந்தையின் ஒரு கரத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் குழந்தையின் அக்குள் முதல் மணிக்கட்டு வரை மில்கிங் மோஷன் முறையில் தடவி விடவும். அதன் பின், மென்மையான முறையில், குழந்தையின் கரங்களை ஒவ்வொரு திசையிலும் 4-5 நிமிடங்களா வரை திருப்பவும். பின் கையை மாற்றி இதனை தொடரவும்.

கைகள்
உங்கள் பெருவிரல்களை வைத்து குழந்தையின் இரு உள்ளங்கையில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். விரல்கள் இரண்டு கைகளின் விரல்களையும் மெதுவாக எடுத்து உங்களின் முன் விரல்கள் மற்றும் பெருவிரலுக்கு மத்தியில் வைத்து, மென்மையாக நீவி விடுங்கள். அப்படி செய்யும் போது அவைகள் உங்கள் கைகளை விட்டு வழுக்கி விட வேண்டும்.

முகம் மற்றும் தலை
குழந்தையின் தலை பின்புறத்தை உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள். பின் தலைச்சருமத்தில் உங்கள் விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வருடி விடுங்கள். அதன் பின், அதன் புருவங்கள், மூடிய கண்கள் மற்றும் கன்னங்களை கடந்து செல்லும் மூக்கின் பாலம் ஆகிய இடங்களில் நீவி விடவும். அதன் பின் குழந்தையின் காது மடல்கள் மற்றும் தாடைகளை வட்ட வடிவில் மென்மையாக தடவிக் கொடுக்கவும்.

நெஞ்சு
உங்கள் கைகளை வணங்கும் நிலையில் வைத்து குழந்தையின் இதயம் இருக்கும் பகுதியின் மேல் வைக்கவும் இப்போது மூடிய கைகளை மெதுவாக திறந்து, குழந்தையின் நெஞ்சின் மீது மிதமான முறையில் தடவி விடவும். இதனை பல தடவை செய்யவும்.

பின்புறம்
பின்புறம் மசாஜ் செய்ய குழந்தையை குப்புற படுக்க போடவும். பின் உங்கள் விரல்களை கொண்டு குழந்தையின் கழுத்து முதல் அடிபாகம் வரை (முதுகெலும்பின் இருபக்கமும்) நீவி விடவும்.

குழந்தைக்கு எப்படி மசாஜ் செய்வது - Part1


குழந்தைக்கு எப்படி மசாஜ் செய்வது - PART 1

குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து விடுதல். அது உங்கள் குழந்தையை இதப்படுத்தும். அதனால் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். 

மசாஜ் செய்வதால் உங்கள் குழந்தைக்கு கூடுதலாக பல பயன்களும் கிடைக்கக்கூடும். உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளர்வதால் ஏற்படும் வலியை சுலபப்படுத்துதல் போன்ற பயன்களை அளிக்கும். உங்கள் குழந்தையுடனான பந்தத்தை வலுப்படுத்த உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சிறந்த வழியாக இருப்பது மசாஜ். குழந்தைக்கும் அது சொகுசை அளித்திடும்.

குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்தால், மஞ்சள் காமாலையில் இருந்து அவர்கள் வேகமாக மீண்டு வருவார்கள். உணவு உண்ணும் இடைவெளியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் உங்கள் குழந்தைக்கு அதிகமாக பசி இருக்காது; அதேப்போல் வயிறு நிறைந்தும் இருக்காது. அதேப்போல் குழந்தை தூங்கி எழுந்தவுடன் மசாஜ் செய்வதும் சரியான நேரமாக இருக்காது. குழந்தை விழித்திருக்கும் போது மசாஜ் செய்வதே சரியான நேரமாகும்.

மசாஜை எப்போது முடித்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குழந்தையே உங்களுக்கு சொல்லும். அதேப்போல் மசாஜில் எது பிடித்திருக்கிறது, எது பிடிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி விடும். மசாஜ் செய்யும் போது குழந்தை அழ ஆரம்பித்து விட்டால், அது போதிய மசாஜ் பெற்று விட்டதாக அர்த்தமாகும். சரி, குழந்தைக்கு எப்படி மசாஜ் செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாமா?

தொடங்கும் முறை
இன்னும் தவழாத குழந்தைகளுக்கு இந்த செயல்முறைகள் சரியானதாக இருக்கும். வெற்றிகரமாக மசாஜ் செய்ய வேண்டுமானால், உணவு உண்ணுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ அல்லது தூங்க போகும் போதோ மசாஜ் செய்யாதீர்கள். உங்கள் குழந்தை தயார் நிலையில் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் உடனே தரையில் ஒரு துண்டை விரித்துக் கொள்ளுங்கள். அருகில் சின்ன கிண்ணத்தில் காய்கறி சம்பந்தப்பட்ட எண்ணெய்யை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். மசாஜை முடிப்பதற்கு முன்பாகவே உங்கள் குழந்தைக்கு தோது இல்லாமல் அழத் தொடங்கினால், மசாஜை நிறுத்தி விட்டு அதனை செல்லமாக அரவணைத்து கொள்ளுங்கள்.


கால்கள்
கால்கள் தான் மசாஜை தொடங்க சிறந்த இடம். அதற்கு காரணம் உடலின் மற்ற அங்கங்களுடன் ஒப்பிடுகையில் கால்களில் தான் உணர்ச்சி சற்று குறைவாக இருக்கும். சிறிது எண்ணெய்யை எடுத்துக் கொண்டு, உங்கள் கைகளை அதன் ஒரு தொடையில் வைத்து, அங்கிருந்து அப்படியே கீழே வரைக்கும் நீவி விடுங்கள். இப்படியே ஒரு கை மாறி மற்றொரு கையை கொண்டு தொடர்ந்து நீவி விடவும். பின் அடுத்த காலுக்கும் இதையே தொடரவும்.

பாதம்
ஒரு பாதத்தை எடுத்துக் கொண்டு சில நிமிடங்களுக்கு, ஒவ்வொரு திசையிலும் அதனை மென்மையாக சுழற்றவும். பின் கணுக்காலில் இருந்து பாதம் வரை மெதுவாக நீவி விடுங்கள். பின் அடுத்த பாதத்தை எடுத்து இதை தொடருங்கள்.

உள்ளங்கால்
உங்கள் பெருவிரலை கொண்டு குழந்தையின் உள்ளங்காலில் மெதுவாக வட்ட சுழற்சி முறையில் நீவி விடவும். இதனை உள்ளங்கால் முழுவதும் செய்ய வேண்டும்.

கால் விரல்கள்
பாதத்தில் மசாஜ் முழுமை பெற வேண்டுமானால், ஒவ்வொரு கால் விரலையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் எடுத்து, மெதுவாக சொடுக்கு எடுக்கவும். இதனை பத்து விரல்களுக்கும் தொடரவும்.

கைகள்
உங்கள் கைகளால் குழந்தையின் ஒரு கையை தூக்கி, அதன் அக்குளில் இருந்து மணிக்கட்டு வரை, பால் கறக்கும் முறையில் மசாஜ் செய்யுங்கள். பின் கையின் மணிக்கட்டை அனைத்து திசையிலும் சில முறை மெதுவாக திருப்பவும். பின் அடுத்த கைக்கு இதையே தொடருங்கள்.


உள்ளங்கைகள்
உள்ளங்கையில் உள்ள சிறிய வட்டங்களை கண்டுபிடித்து, அங்கே உங்கள் பெருவிரலால் சுழற்சி முறையில் மசாஜ் செய்யுங்கள்.

விரல்கள்
விரல்கள் ஒவ்வொன்றையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் எடுத்து, மெதுவாக சொடுக்கு எடுத்து விடவும். இதனை 10 விரல்களுக்கும் செய்திடுங்கள்.

நெஞ்சு
வணங்கும் முறையில் கைகளை குழந்தையின் நெஞ்சின் மீது வையுங்கள். பின் கைகளை மெதுவாக திறந்து, அப்படியே நெஞ்சு முழுவதும் நீவி விடுங்கள். இதை செய்யும் போது உங்கள் கைகள் தட்டையாக அவர்கள் நெஞ்சின் மீது இருக்க வேண்டும். இதனை பல முறை செய்யவும்.
நெஞ்சின் மேல் ஒரு கையை தட்டையாக வைத்துக் கொள்ளுங்கள். பின் தொடை வரைக்கும் அப்படியே மெதுவாக நீவி விடுங்கள். இரண்டு கைகளிலும் மாறி மாறி இதனை பல முறை தொடர்ந்து செய்யுங்கள்.
பின்பக்கம்
குழந்தையை குப்புற படுக்க வையுங்கள். உங்கள் விரல் நுனிகளை கொண்டு, குழந்தையின் இருபக்க முதுகெலும்பின் ஆரம்பித்தில் இருந்து கீழே வரை சிறிய வட்டங்களை கண்டுபிடித்து, மெல்ல நீவி விடுங்கள். தோளில் இருந்து பாதம் அவரை திடமாக நீவி விடுங்கள்.
முடிந்த பிறகு, குழந்தைக்கு ஜட்டியை போட்டு விட்டு, அதனை அரவணைத்து கொள்ளுங்கள். பின் தாய்ப்பால் கொடுங்கள். உடனே தூங்கி விடுவார்கள்.

குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள்


குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள்

புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு குழந்தையைப் பற்றி முழுமையாக தெரியாது. நாளாக ஆக தான் அவர்களால் குழந்தையைப் புரிந்து கொள்வார்கள். முக்கியமாக குழந்தை எந்த காரணத்திற்கு எல்லாம் அழும் என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தை அழுவதை நிறுத்த உதவும் 2 அழுத்தப் புள்ளிகள் குறித்து கொடுத்துள்ளது.

அந்த இடங்களில் அழுத்தம் கொடுத்தால், குழந்தைக்கு உள்ள பிரச்சனை நீங்கி, குழந்தை அழுவதை நிறுத்திவிடும். சரி, இப்போது எந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால், குழந்தை அழுவதை நிறுத்தும் என காணலாம்
ரிப்லக்ஸாலஜி
உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்து சரிசெய்யும் ஒரு முறை தான் ரிப்லக்ஸாலஜி. இது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு சீன வைத்திய முறை.
குழந்தைகள் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைகள் தன் பெற்றோருடன் அழுகையின் மூலம் தான் தொடர்பு கொள்ளும். அது பசியாகட்டும், அசதியாகட்டும், உடலில் ஏதேனும் பிரச்சனையாகட்டும், அதை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். ஆரம்பத்தில் புதிதாக பெற்றொர் ஆனவர்கள், குழந்தை அழுவதைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால் போக போகத் தான் அவர்களுக்கே புரியும்.
மிகுதியான அழுகை
சில நேரங்களில் குழந்தைகள் தலைவலி, வயிற்று வலி போன்றவை இருக்கும் போது, நிறுத்தாமல் பல மணிநேரம் அழுவார்கள். இந்நேரத்தில் சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய முயல வேண்டும்.

வழி #1
குழந்தை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தால், குழந்தைக்கு தலைவலி அல்லது வயிற்று வலி இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அப்போது குழந்தையின் ஒவ்வொரு கால் பெருவிரல் பகுதியிலும் சுமார் 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு இருக்கும் தலைவலி சரியாகும்.

வழி #2
ஒரு வேளை குழந்தைக்கு இருக்கும் வயிற்று வலியைப் போக்க வேண்டுமானால், பாதத்தின் மையப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் அழத் தொடங்கினால் எவ்வாறு நிறுத்தலாம்?


குழந்தைகள் அழத் தொடங்கினால் எவ்வாறு நிறுத்தலாம்?


"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ்(உணவு), அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது திருவள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும். இதுபோன்ற சமயங்களில் தாயின் நிலைமையை சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இயற்கையிலேயே தாயின் எண்ணமும் செயலும் எப்போழுதும் குழந்தையை சுற்றியே இருக்கும் இருப்பினும் முதல் குழந்தை பெற்ற தாய்க்கு உடலாலும் மனதாலும் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எடுத்துக்காட்டாக அதிக எடை, வயிற்றில் ஏற்படும் தழும்புகள் முதல் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் முடி உதிர்வு என எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன. இது ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தையின் இடைவிடாத அழுகை தாயின் கவலையை மென்மேலும் அதிகரிக்கும்.

காரணங்கள்
குழந்தையின் அழுகைக்கு ஒரே காரணம் தான் இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள் பல காரணங்கள் உள்ளன. எனவே முதலில் என்ன காரணத்திற்குகாக அழுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாதி வெற்றி தான். ஆனால் அது சுலபமல்ல. இருப்பினும் கீழே பொதுவான காரணங்கள் சிலவற்றை கொடுத்துள்ளோம்.
• பசி ஏற்பட்டால்
• தூக்கம் வந்தால்
• ஈரமான டயபர்
• வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்
• சோர்வு
• அதிகமான வெப்பம் அல்லது குளிர்
• இறுக்கமான உடைகள்
• வலி ஏற்படும் போது
• தூண்டுதல் காரணமாக
• கையில் வைத்திருக்க வேண்டும் என்ற வேளைகளில்

எவ்வாறு நிறுத்தலாம்?
ஒரு சில குழந்தைகள் எப்போதும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இருப்பதை கொண்டு விளையாடும் குறைவாகவே அழும். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் அப்படி இருப்பதில்லை, எப்பொழுதும் கைகளில் வைத்திருக்க சொல்லும் தாயின் அரவணைப்பிலேயே இருக்க வேண்டும் என்று என்னும். எப்போதவது அப்படி என்றால் சமாளித்து விடலாம் எல்லா நேரமும் கைகளில் வைத்திருப்பது இயலாத காரியம் பின்னர் மற்ற வேலைகளை கவனிக்க நேரம் இல்லாமல் பொய் விடும் அது மட்டும் இல்லாமல் குழந்தையின் வழக்கமான தூக்கம் மற்றும் உணவு நேரங்களில் பாதிப்பு ஏற்படும். இது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் அழுகையை எவ்வாறு நிறுத்த வேண்டும் என அறிந்திருத்தல் அவசியம்.

சோதனைகள் - பசி
அதிகப்படியான நேரங்களில் குழந்தை பசியினால் அழலாம் எனவே பாலூட்ட முயற்சி செய்யுங்கள்; ஒருவேளை குழந்தை குடிக்க மறுத்தால், பசியின் காரணமாக ஆழவில்லை என்பதை உறுதி செய்யலாம். குழந்தை பசியினால் அழவில்லை என்றால் இரண்டாவது முக்கிய காரணம் ஈரமான டயபர். ஈரமான டயப்பரை மாற்றிவிடுங்கள் குழந்தையின் அழுகை நின்று விடும். அடுத்ததாக எறும்புகள் அல்லது மற்ற பூச்சிகள் கடித்தால் குழந்தை அழலாம். எனவே குலத்தாயி கை, கால் மற்றும் உடலில் சிவந்த தடுப்புகள் உள்ளனவா என சோதிக்கவும். இறுக்கமான ஆடை கூட காரணமாக இருக்கலாம், அப்படியெனில் குழந்தையின் துணிகளை மாற்றுங்கள். குழந்தையின் உடல் வெப்பநிலையை சரிபார்க்கவும் அதிக குளிர்ச்சி அல்லது அதிக வெப்பம் இரண்டும் உடல் நல குறைவின் அறிகுறிகள் எனவே உடனே மருத்துவரை அணுகவும்.

துணியினால் சுற்றுதல் (ஸ்வாடில்):
குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.

மேலும் கீழும் (ராக்) அசைத்தல்
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.

தாலாட்டு பாடல்கள்
இனிமையான தாலாட்டு பாடல்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்தி மன அமைதியை தரும். இனிமையான பாடலுடன் சேர்த்து மென்மையான அசைவு (ராக்கிங்) மிக விரைவான முடிவுகளை தரும். அதிலும் பழைமையான பாடல்கள் சிறந்த தேர்வு என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பெரும்பாலும் குழந்தைகள் தாய் எப்படி பாடுகிறாள் என்பதை விட தாலாட்டு பாடல்களையே பெரிதும் விரும்புகிறார்கள். எனவே, உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்த தாலாட்டு போன்ற பாடல்களை பாடுங்கள்.

மசாஜ்
மசாஜ் கோலிக் சிம்டம்ஸை மேம்படுத்துவதில் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு கோலிக் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லா குழந்தைகளும் ஒரே சமயத்தில் சுவாசித்தல் மற்றும் சாப்பிடுதல் என அசாதாரண திறனைக் கொண்டுள்ளன. இந்த திறமை பாலூட்டும் பொழுது குழந்தைகள் தொடர்ந்து உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இதனால் குழந்தையின் வாயிற்றில் காற்று பில்டப் ஆவதற்கு வழிவகுக்கிறது. உங்கள் குழந்தைக்கு பாலூட்டிய பின்பு காற்று ஃபார்மேஷனால் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதற்கு அழுகை பெரும் உதவியாக இருக்கும். இயற்கையிலேயே வயிற்றில் இருந்து தேவையற்ற வாயுவை வெளியேற்ற அழுகை உதவி செய்கிறது. எனவே பாலூட்டிய பின்பு மெதுவாக உங்கள் குழந்தைக்கு நிமிர்ந்த நிலையிலேயே சுமார் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். பின்பு மெதுவாக அதன் பின்புறத்தில் தட்டி கொடுங்கள்.

கருப்பை ஒலி
கருப்பையில் இருக்கும் குழந்தை முற்றிலும் அமைதியான சூழலில் இருப்பதில்லை. குழந்தைகள் தாயின் இரத்த ஓட்டத்தின் ஒலிகளைக் கேட்கிறார்கள், மேலும் அவை தாயின் வயிறு மற்றும் குடல் இயக்கங்களின் ஒலியையும் கேட்கின்றன. இதேபோன்ற ஒலியை உருவாக்குவதன் மூலம், குழந்தையை கர்ப்பபைக்குள் இருக்கும் உணர்வை ஏற்படுத்தலாம். குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு இது ஒரு சிறந்த யோசனை. தந்தை அருகே இருந்தால், உங்களுக்கு தேவையானதெல்லாம் மென்மையான அரவணைப்பு தான். எப்படி என்றால் தந்தையின் மார்போடு நெருக்கமாக (பௌத்த துறவியை போல) குழந்தையை வைத்திருப்பதன் மூலம் இதயத்தின் அதிர்வு உங்கள் குழந்தை அழுவதை நிறுத்தி மிதமான அமைதியை வழங்கும்.

சைக்கிள் மூவ்
வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.

தூண்டல்கள் (ஓவர்-ஸ்டுமுலேசன்)
குழந்தைகள் எதாவது ஒரு காரணத்தினால் தூண்டப்படும் பொழுது அழுகிறார்கள். சத்தமான ஒலி, பெரிய அல்லது திடீர் அசைவுகள் மற்றும் இது போன்ற சூழ்நிலைகளை குழந்தைகளினால் தாங்க முடியாத பொழுது ஆழ தொடங்கி விடும். அதிகமாக பாலூட்டுதல் மற்றும் கையாளும் விதம் கூட தூண்டலுக்கு வழிவகுக்கும். இங்கே ஓவர்-ஸ்டுமுலேசனுக்குரிய அறிகுறிகள் சிலவற்றை கொடுத்துள்ளோம்:

வேகமாக சுவாசித்தல்
தோல் நிறத்தில் மாற்றம் திடீர் அசைவுகள் நீங்கள் குழந்தையுடன் பேசும் போது தலையைத் திருப்புவது இது போன்ற நேரங்களில் உங்கள் குழந்தையை அமைதியான இடத்திற்கு எடுத்து செல்லுங்கள், விளக்குகளை மங்கச் செய்து, உங்கள் குழந்தையை ஆறுதல் படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம்.

கவனத்தை திசை திருப்புதல்
குழந்தை பசி, தூக்கம் மற்றும் வயிற்று பிரச்சினைகளால் அழவில்லை என்பதை உறுதி செய்த பின், அழுகையை நிறுத்துவதற்கு குழந்தையின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கவும். உங்கள் குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப சில பயனுள்ள வழிகள்
  • ஆடியோவை ஒலிக்க செய்தல்
  • அசையும் அல்லது ஒலி எழுப்பும் பொம்மைகளை காட்டுதல் வேடிக்கையான குரல் அல்லது முக பாவனையின் மூலம் கவனத்தை திருப்புதல்
  •  உங்கள் குழந்தையை ஜன்னலின் அருகே கொண்டு சென்று வெளிப்புற உலகத்தை காட்டுதல்.
  • அதாவது மரங்களின் கிளைகள் மற்றும் நகரும் வாகனங்கள் அல்லது பறவைகள் ஆகியவற்றை காட்டவும்.
வெளியில் கொண்டு செல்லுதல்
 ஜன்னலின் வழியே தெரியும் காட்சி உதவாத நேரங்களில். சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் மரம் மற்றும் காற்று உள்ள வெளி இடங்களுக்கு எடுத்து செல்லவும். கவலை கொண்ட குழந்தைகள் கூட இதை விரும்பும். இயற்கை காட்சிகள் நிறைந்த சூழல் குழந்தையின் கவனத்தை ஈர்த்து அமைதியாக இருக்க செய்யும்.

சிறிய பயணம்
உங்கள் குழந்தை அழுவதை நிறுத்த மிகவும் வழக்கமான மற்றும் எளிய வழி, அதே நேரம் குழந்தைகள் விரும்பும் செயல் வாகனத்தில் பயணிப்பது. இது ஒரு மந்திரம் போல வேலை செய்யும். இது வாகனத்தின் மென்மையான சத்தமா அல்லது கார் திருப்பங்களில் திரும்புவதாலா எது என்று இன்று வரை புரியவில்லை என்றாலும், பல சமயங்களில் சிறிய பயணத்திலேயே குழந்தைகள் விரைவாக தூங்கி விழும். உங்கள் குழந்தைக்கு உங்களது காரை பிடித்திருக்கிறது என்றால் மட்டும் போதும், அழும் நேரத்தில் உங்கள் தெருவின் ஒரு பகுதியை சுற்றி ஒரு சுற்று சுற்றினால் போதும். அதுவே உங்கள் குழந்தையை தூங்க செய்து விடும்.

சரியான உணவு திட்டம்
ஒரு தாயாக, உங்கள் குழந்தையின் உணவு முறைகளை கவனித்து கொடுத்தால் அதுவே உங்களின் பாதி பிரச்சினைகளை சரி சேய்து விடும். உங்கள் குழந்தையின் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்த கூடிய உணவுகளை தவிர்த்தல் மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் போன்ற சில உணவுகளை தேவையான அளவு மட்டுமே கொடுத்தல் போன்ற உணவு முறைகளை பின்பற்றுதல் நல்லது. ஒரு தாயாக உங்களின் அன்பு மற்றும் அரவணைப்பு உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுக்கும். மேலும் எங்களின் இந்த தொகுப்பு அதற்கு உதவும் என்று நாங்கள் எண்ணுகிறோம்.

பால் குடிக்கும்போதே குழந்தை தூங்கிவிடுவதை ஏன்.

பால் குடிக்கும்போதே குழந்தை தூங்கிவிடுவதை ஏன்.


பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு வேறெதுவும் இல்லை. இந்த காரணத்தினால் தான், மருத்துவர்கள் எல்லா தாய்மார்களும் தாய்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் பிரசவத்திற்கு பின் விரைந்து தன் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும் குழந்தை பிறந்து முதல் சில மாதங்களில் தாய்ப்பால் குடிக்கும்போதே சில குழந்தைகள் தூங்கி விடுகின்றனர்.

தாய்மை
தாய்மையை புதிதாக அனுபவிக்கும் தாய்மார்கள் அச்சம் கொள்கின்றனர். இது அப்படி பயம் கொள்ளும் அளவிற்கு பெரிய விஷயம் இல்லை என்றாலும், குழந்தையின் வளர்ச்சி குறித்த ஒரு பயம் அவர்களுக்கு உண்டாகிறது. அத்தகைய தாய்மார்களுக்கான ஒரு பதிவு தான் இது. குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது தூங்குவதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு உங்களுக்கான தீர்வையும் நாங்கள் கொடுத்துள்ளோம். இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அசௌகரியம்
குழந்தை நன்றாக பால் குடிக்க வேண்டுமானால், அவர்கள் தாயின் மடியில் சரியான முறையில் கிடத்தப்பட வேண்டும். அப்படி அவர்கள் சரியான முறையில் படுக்காமல், மார்பின் முளையை சரியாக வாயால் பிடிக்காமல் இருந்தால் அவர்களால் பால் அருந்த முடியாது. இதனால் குழந்தை பால் அருந்தும்போதே தூங்கி விடலாம். தாய்பால் கொடுப்பதே ஒரு வலி நிறைந்த அனுபவமாக இருக்கும்போது குழந்தை சரியாக பால் குடிக்காமல் தூங்குவது தாய்மார்களுக்கு இன்னும் அதிக வேதனையைத் தரலாம். இதனைப் போக்க, தாய்பால் கொடுக்க தொடங்குவதற்கு முன், குழந்தையை சௌகரியமாக மடியில் வைத்துக் கொள்ளலாம். தாயின் மார்பு முளை குழந்தையின் வாயில் சரியாக படுவதற்கு ஏற்ற வகையில் குழந்தையை தூக்கிக் கொள்ளுங்கள். இதனால் குழந்தை எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் பால் குடிக்கத் தொடங்கும்.

என்ன செய்ய வேண்டும்?
அடுத்த சில நிமிடங்களில் குழந்தை தூங்கத் தொடங்கினால், உடனடியாக மார்பில் இருந்து குழந்தையின் வாயை விடுவித்து விட வேண்டாம். மெதுவாக உங்கள் விரலை குழந்தையின் வாயில் செலுத்துங்கள். இதனால் குழந்தைக்கு பால் உள்ளே செல்வது நிறுத்தப்படும். குழந்தையின் வாயை உடனடியாக மார்பில் இருந்து விடுவிப்பதால் உங்கள் மார்பு வலிக்கலாம். ஆனால் விரலை கொண்டு விடுவிப்பதால் இந்த வலி இல்லாமல் குழந்தையை விடுவிக்கலாம். மறுபடியும் குழந்தையை மடியில் சரியாக கிடத்தி பின் மறுபடி பால் குடிக்கச் செய்யலாம்.

வயிறு நிரம்பி இருக்கலாம்
பல நேரங்களில் பால் குடிக்கும்போது குழந்தை தூங்குவதற்கான முக்கிய காரணம், அவர்களின் வயிறு நிரம்பி இருக்கலாம். வயிறு நிரம்பி திருப்தியாக இருக்கும் போது தூக்கம் அவர்களுக்கு மிகவும் தேவை என்பதால் மறுபடியும் பால் குடிக்கும்போது அவர்கள் இயல்பாகவே தூங்கி விடலாம். குழந்தைக்கு அதிகமாக பால் கொடுத்துக் கொண்டே இருப்பது அவசியம் இல்லாத ஒன்று. குழந்தை அழும்போதெல்லாம் பால் கொடுக்க வேண்டாம். குழந்தை அழுவதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். குழந்தையின் வயதுக்கேற்ற விதத்தில் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும் என்று குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ஒரு அட்டவணை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் வயது, எடை போன்றவற்றைக் கொண்டு இந்த அளவை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதன்படி நடப்பதால் அளவுக்கு அதிகமாக குழந்தைக்கு பால் புகட்ட வேண்டியதில்லை.

குறைந்த எடை
பிறக்கு போது சரியான எடையில் இருக்கும் குழந்தையை விட, எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பால் குடிக்கும் போது அடிக்கடி தூங்குவதாக அறியப்படுகிறது. மலம் அல்லது சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, (குறைவாக கழிப்பது) மிகவும் பலவீமாக இருப்பது, அல்லது வேறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றுவது போன்ற பிரச்சனைகள் வந்தால் மட்டுமே நீங்கள் கவலை படலாம். அதுவரை அவர்கள் பால் குடிக்கும்போது தூங்கினால் கவலைப் பட வேண்டாம். அப்படியும் நீங்கள் பயந்தால் , குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசனைக் கேளுங்கள், ஆனால் தொடர்ந்து குழந்தைக்கு தாய் பால் கொடுங்கள். சரியான பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் மூலமாக உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும். கவலை வேண்டாம்.

தூக்கமின்மை காரணமாக அதிக சோர்வு
தாயின் அரவணைப்பு குழந்தைக்கு மிகவும் அவசியம். முதல் சில மாதங்களுக்கு தாய் குழந்தைக்கு மிக அருகிலேயே இருப்பது மிகவும் அவசியம். குழந்தை தாயின் அரவணைப்பில் இருக்கும் போது ஒரு கதகதப்பான உணர்வு தோன்றும். இதனால் குழந்தை சீராக பால் குடிக்கலாம் , அழகாக தூங்கலாம். தாய் குழந்தையை விட்டு விலகுவதால் நெருக்கமின்மை காரணமாக குழந்தைக்கு பதட்டம் மற்றும் சோர்வு உண்டாகி தூங்காமல் இருக்கலாம். ஆகவே நீங்கள் பால் கொடுப்பதற்காக குழந்தையை தூக்கி மடியில் கிடத்தும்போது தாயின் அரவணைப்பு மற்றும் தாயின் தொடுதல் குழந்தைக்கு ஆனந்தத்தைக் கொடுத்து தூக்கத்தையும் உண்டாக்கலாம்.'

தொற்று பாதிப்பு
பிறந்த குழந்தை மற்றும் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் சிக்கல் உண்டாவது மற்றும் தொற்று பாதிப்பு போன்றவை தவிர்க்க முடியாததாகும். தொற்று பாதிப்பால் குழந்தை சோர்வாக இருக்கும். இதன் விளைவாக பால் குடிக்கும்போது கூட அடிக்கடி தூங்கத் தொடங்கலாம். சரியான மருத்துவ உதவிகள் மூலம் இந்த நிலைமையை சரியாக்கி குழந்தையின் பாதிப்பை போக்கலாம்.

சூழல்
இருட்டான அறையில் பால் புகட்டுவதால், குழந்தைக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குழந்தைக்கு பால் புகட்டு அறை ஓரளவிற்கு வெளிச்சமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெளிச்சம் அவர்கள் கண்களை உறுத்தாமல் இருக்க வேண்டும், அதேசமயம் இருட்டாகவும் இருக்கக் கூடாது. ஓரளவிற்கு வெளிச்சம் உள்ள அறையில் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். மேலும், குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பதால் அவர்கள் விழித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குழந்தைகள் முகவும் சிறியவர்கள். அவர்கள் ஒரு நாள் இருப்பதுபோல் எல்லா நாளிலும் இருக்க மாட்டார்கள். அதனால் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது தாய்மார்கள் விழிப்புணர்வோடு இருப்பதால் இந்த அனுபவத்தை நீங்களும் குழந்தையும் மகிழ்ச்சியாக உணரலாம்.

குழந்தைகளின் சைகைகளும் அதன் அர்த்தங்களும்

குழந்தைகளின் சைகைகளும் அதன் அர்த்தங்களும்



அம்மாவாக இருப்பது அனைத்து பெண்களுக்குமே மகிழ்ச்சிதான். அதிலும் புதிதாக அம்மாவானவர்கள் முழுநேரமும் தங்கள் குழந்தை அருகிலேயே அமர்ந்து அவர்களை கவனித்து கொள்வார்கள். உலகிலேயே அழகான ஒன்று மழலை மொழியை கேட்பது, அதேபோல் உலகிலியே கடினமான ஒன்று குழந்தைகள் பேசுவதை புரிந்து கொள்வது. ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகள் பேச தொடங்கியிருக்க மாட்டார்கள். அவர்களின் தேவை என்னெவென்பதைபுரிந்து கொள்வது மிகவும் கடினம்.

குழந்தைகள் திடீரென அழுவது போல உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அவர்கள் அழ தொடங்குவதற்கு முன் சில சைகைகளை செய்திருப்பார்கள். அதை நீங்கள் முன்னரே அறிந்திருந்தால் அவர்களின் அழுகையை தடுத்திருக்கலாம். இதுபோல ஒவ்வொரு செயலுக்கு முன்னும் குழந்தைகள் சில சைகைகளை செய்வார்கள். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்தான் நீங்கள் எப்படி பட்ட பெற்றோர் என்பது உங்களுக்கே புரியும். இங்கே குழந்தையின் ஒவ்வொரு சைகைக்கும் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

கால்களால் உதைத்தல்
குழந்தைகள் கால்களால் உதைப்பது அவர்களின் மகிழ்ச்சியின் அறிகுறியாகும். நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் குழந்தை தண்ணீரில் விளையாடும்போதும், நீங்கள் அவர்களுடன் விளையாடும்போதும் கால்களை உதைப்பதை தெரியும். ஏனெனில் அந்த சமயங்களில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தையை சந்தோஷப்படுத்த விரும்பினால் அவர்களை உங்கள் மடியில் படுக்க வைத்துக்கொண்டு பாடவோ அல்லது விளையாடவோ செய்யுங்கள். இது அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

முதுகை வளைத்தல்
குழந்தைகள் முதுகை வளைப்பது அந்த சூழல் பிடிக்காதது அல்ல வலியின் அறிகுறியாகும். பெரும்பாலும் குழந்தைகள் மார்பு பகுதியில் வலி இருந்தால் முதுகை அதிகம் வளைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் மென்மையாக அவர்களின் மார்பு பகுதியில் மசாஜ் செய்து விடுங்கள். ஒருவேளை நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது முதுகை வளைத்தாள் அது போதுமென்பதற்கான அறிகுறியாகும். அதற்கு மேல் அவர்களை பால் குடிக்க கட்டாயப்படுத்தாதீர்கள். இல்லையெனில் அழ தொடங்கிவிடுவார்கள்.

தலையை முட்டுதல்
குழந்தைகள் தரையை நோக்கியோ அல்லது எதிரே உள்ள பொருள் மீதோ தலையால் முட்டினால் அது எரிச்சல் அல்லது வலியால் அவதிப்படுவதின் வெளிப்பாடாகும். அந்த சூழ்நிலையில் குழந்தையின் தலையுடைய முன்புறத்தையும், பின்புறத்தையும் மென்மையாக தடவி கொடுப்பது அவர்களுக்கு ஆறுதலாய் அமையும். ஒருவேளை அதன்பிறகும் உங்கள் குழந்தை தொடர்ந்து தலையை முட்டிக்கொண்டிருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்ளுங்கள், ஏனெனில் உங்கள் தலை போல உங்கள் குழந்தையின் தலை வலுவானது அல்ல.

காதை பிடித்தல்
உங்கள் குழந்தை காதுகளை பிடித்து கொண்டு சிரித்தால் அது அவர்கள் அவர்களுடைய காதுகளை கண்டுபிடித்து விட்டதன் அறிகுறியாகும். ஏனெனில் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் குழந்தையை யார் தூக்கினாலும் அவர்கள் காதுகளை பிடித்து விளையாடுவார்கள். அதேபோன்ற அமைப்பு தன்னிடமும் இருக்கும்போது அது அவர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஒருவேளைஉங்கள் குழந்தை காதுகளை பிடித்துக்கொண்டு அழுதால் அது காதில் வலி அல்லது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதேபோல காதுகளை பிடித்து இழுத்தாள் அது பல் முளைப்பதற்கான அறிகுறியாகும்..

முட்டியை மடக்குதல்
குழந்தைகள் முட்டியை மடக்குவது எப்பொழுதும் செய்யும் ஒன்றாக இருக்கலாம், அதே சமயம் சில நேரங்களில் பசி அல்லது கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். கோபமாக இருக்கும்போதும், பசியுடன் இருக்கும்போதும் குழந்தைகள் கையை கையை மடக்கி இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களுடன் விளையாடி பிஞ்சு கைகளால் வாங்கிக்கட்டி கொள்ளாதீர்கள். குழந்தை முட்டியை மடக்கி இருக்கும்போது பாலூட்டி பாருங்கள், குடிக்கவில்லையெனில் அவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் அவர்களுடன் விளையாடுங்கள். குழந்தை பிறந்து மூன்று மாதமாகியும் கைகளை மூடும் பழக்கமிருந்தால் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துபார்த்து கொள்ளுங்கள்.

முழங்கால்களை சுருட்டுதல்
குழந்தைகள் முழங்கால்களை சுருட்ட்டினால் அது செரிமானக்கோளாறு என்று அர்த்தம். உங்கள் குழந்தை முழங்கால்களை சுருட்டினால் அது வாயுக்கோளாறோ அல்லது மலச்சிக்கலாகவோ இருக்கலாம். எனவே உங்கள் குழந்தை வாயுக்கோளாறால் கால்களை மடக்கினால் அவர்களுக்கு ஏப்பம் விட உதவி செய்யுங்கள். உங்கள் குழந்தை உங்களுக்கு முக்கியமெனில் வாயுவை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை உண்ணாதீர்கள். ஒருவேளை உங்கள் குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரிடம் தூக்கி செல்லுங்கள், போதுமான அளவு நீர் கொடுங்கள்.

கை அதிர்வு
இது குழந்தை அசாதாரண சூழ்நிலையில் எச்சரிக்கையாய் இருப்பதற்கான அறிகுறி ஆகும். பொதுவாக பிறந்த குழந்தைகள் திடீரென அதிக சத்தத்தை கேட்கும்போதோ அல்லது அதிக வெளிச்சத்தை உணரும்போதோ கைகளை வேகமாக அசைப்பார்கள். அதேபோல திடீரென தரையில் படுக்கவைக்கும் போது கையை வேகமாக அசைப்பார்கள், ஏனெனில் அந்த தருணத்தில் குழந்தைகள் பாதுகாப்பின்மையாய் உணருவார்கள். இது நீங்கள் பயப்பட கூடிய அளவுக்கு பெரிய பிரச்சினை அல்ல. குழந்தைகள் நான்கு மாதம் கடந்தவுடன் இந்த பழக்கம் தானாக நின்றுவிடும். உங்கள் குழந்தையை தூங்க வைக்கும்போது அருகிலியே நில்லுங்கள், நீங்கள் அவர்களை சுற்றியே இருப்பது அவர்களை பாதுகாப்பாய் உணரச்செய்யும்.