Thursday, June 25, 2015

‪பித்தம்‬‬‬ நீங்க . . .

‪#‎பித்தம் நீங்க . . .
விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம்.
இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.
‪#‎அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மையை கொடுப்பதுடன் உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்து பித்ததை குறைக்கும்.
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
‪#‎இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
‪#‎ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
‪#‎விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
‪#‎அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
‪#‎பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
செங்கரும்புச் சாறு 100 மி.லி, எலுமிச்சைப் பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றுடன் சீரகப் பொடியை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய் தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
உசிலம் பட்டை, வசம்பு, துளசி வேர், வில்வ வேர், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி கஷாயத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
பித்தக் கணை நோய் குறையும்.
நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.
திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும்.
இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.
‪#‎ஆவாரை ‌பி‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், வாத‌த்‌தி‌ற்கு‌ம் அரு‌மரு‌ந்தாகு‌ம்.
ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.
பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.
நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுட‌ன் சே‌ர்‌த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.
ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.
கடுக்காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து காலையிலும் மாலையிலும் உட்கொள்ள குணமடையும்.
பித்தம் தலைக்கேறினால் தலைசுற்றல் வரும். பித்தம் தெளிய, ஒரு கைப்பிடி கொத்தமல்லியை வேகவைத்து, அதன் சாறினை பனைவெல்லம் சேர்த்து பருகினால் பித்தம் சத்தம் இல்லாமல் ஓடும்.
மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

Friday, June 12, 2015

Tips: Daily Lemon Juice

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...
எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...
2. உடலின் pH ஐ சீராக்குகிறது...
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...
3. உடல் எடையைக் குறைக்கிறது...
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...
4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...
5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு.
6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.
7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...
8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
9. stress ஐ குறைக்கிறது.
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.
10. காலையில் டீ அல்லது காஃபி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.