Tuesday, September 15, 2015

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கு மாதம் ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் பல் மருத்துவரிடம் அடிக்கடி சென்று பற்களை சுத்தம் செய்ய போர் அடித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை சுத்தப்படுத்துங்கள்.

பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...
பொதுவாக பற்களில் பின்னால் ஏற்படும் கறைகளானது, பாக்டீரியாக்கள் புரோட்டீன் மற்றும் உணவுகளுடன் சேர்ந்து, பற்களின் பின்னால் ஒரு படலமாக படிகிறது. அப்படி படியும் படலத்தைத் தான் பற்காறை அல்லது ப்ளேக் என்று கூறுவார்கள். இப்படி பற்களின் பின்னால் படியும் கறைகளை, பற்களை துலக்குவதன் மூலம் நீக்குவது என்பது கடினம்.
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!

அதுமட்டுமின்றி, அந்த பற்காறைகளை நீக்காவிட்டால், அவை ஈறுகளை தாக்கி, பற்களின் எனாமலை பாதித்து, சொத்தை பற்களை உருவாக்கிவிடும். எனவே பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்க வேண்டியது அவசியம்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான 17 இயற்கை வைத்தியங்கள்!!!
சரி, இப்போது பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

கிராம்பு
3-4
கிராம்பை பொடி செய்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கறையுள்ள பற்களின் மேல் தடவி, பின் டூத் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பற்காறைகள் அகலும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை உட்கொள்வதன் மூலம், பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் பற்களின் பின்புறத்தில் உள்ள காறைகளைப் போக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரினால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

மாதுளை

மாதுளை பூவை காய வைத்து பொடி செய்து, பின் அதில் சிறிது ப்ளாக் உப்பு சேர்த்து, அத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, தினமும் இரண்டு முறை பற்களை துலக்கினால், பற்களில் உள்ள கறைகள் அகன்றுவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கூட பற்காறைகளைப் போக்க உதவும். அதற்கு விரலால் பேக்கிங் சோடாவை எடுத்து பற்களை தேய்த்து, 2 நிமிடம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்த்தால், பற்காறைகள் உருவாவது தடுக்கப்படுவதோடு, அவை இருந்தாலும் விரைவில் அகன்றுவிடும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி இலைகள் கூட சொத்தைப் பற்களைத் தடுக்கும் என்பது தெரியுமா? அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் கொத்தமல்லி நீரால் வாயைக் கொப்பளிப்பது தான்.

வால்நட்ஸ்

வால்நட்ஸை பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகளில் தேய்த்து, பின் பிரஷ் கொண்டு 2 நிமிடங்கள் பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள காறைகள் அகலும். மேலும் பற்களும், ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பற்காறைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் ஆப்பிளானது பற்களில் அழுக்குகள் சேர்வதைத் தடுத்து, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ஆரஞ்சு தோல்


 ஆரஞ்சு தோலை காய வைத்து, பொடி செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்காறைகள் விரைவில் நீங்கும். குறிப்பாக இச்செயலை வாரம் இரண்டு முறை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள் - Time Management

நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள் - Time Management


கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை அவசியம் என்றும், அதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார் மாணவர்களுக்கான மென்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கிருஷ்ணா சுரேஷ் என்.எல்.பி. இதுகுறித்து அவர், "ஒரு மாணவனாக நீங்கள் உருவாக்கும் நேர மேலாண்மை உத்திகள் மற்றும் வழிமுறைகள் உங்களுடைய பிற்கால வாழ்விற்கு பெரிதும் உதவும். ஒரு மாணவனாக படிப்பில்  நீங்கள் செலுத்தும் கவனம்,படிப்தற்கு ஒதுக்கப்படும் நேரம்,படிக்க வேண்டிய பாடங்களை சிறிது சிறிதாக உரிய காலகட்டத்தில் முடித்தல் ,திறம் பட திட்டமிடப்பட்ட நேர மேலாண்மை ஆகியவை உங்கள் இலக்கினை நோக்கி பயணப்பட உங்களுக்கு உதவும்.

படிக்கும் பழக்கம்: தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பாடங்களை படித்தல், பிரதி வாரத்திற்குரிய பாடங்களை திட்டமிட்டபடி படிக்க முடிந்ததா என்று ஆய்வு செய்தல், படிப்பதற்கு அரை மணியும்,படித்ததை நினைவு கொள்வதற்கு சில மணி துளிகளும் செலவிடலாம்.

தியானம், உடற்பயிற்சி அவசியம்: படிக்கும் இடத்தை படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தி இடையுறு இல்லாமல் பார்த்துகொள்ள்ளலாம். வகுப்பு முடிந்தபின் பாடம் தொடர்பான பணிகளை பற்றி குறிப்பு எழதி வைத்து கொண்டு முடிந்த பின் சரி பார்க்கலாம். ஓய்வு நேரத்தில் உடற் பயிற்சி, தியானம்,மூச்சு பயிற்சி,பாடல்கள் கேட்டல்,போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

நேரம் தவறாமை: தேவையான ஓய்வினை எடுத்துகொண்டு நேரம் தவறாமல் பணிகளை செய்ய வேண்டும். கடிகாரத்தை சில மணித்துளிகள் முன்பாக வைக்கலாம்.

படிக்கும் சூழல்: காணொலி,மின் புத்தக உபயோகம், நடந்து கொண்டே படிப்பது,படிக்கும் இடத்தில் ஊதுபத்திகளை நறுமணத்திற்காக பயன் படுத்துதல் ஆகியவற்றால் மன அழுத்தம் குறைந்து மூளை சுறு சுறுப்பாகும்.

நம்பிக்கை: எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

கனவு காணுங்கள்: உங்கள் இலக்கினை அடைந்து விட்டதாக அடிக்கடி கனவு காணுங்கள்.நிஜத்தில் அதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தள்ளிப் போடாதீர்கள்: கடைசி நேரத்திற்கு வேலைகளை தள்ளி போடாதீர்கள்.கவலை படுவதை நிறுத்துங்கள்.கடினமான வேலைகளை செய்யாமல் ஒதுக்காதீர்கள்.வேலையை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.உரிய காலத்தில் பணிகளை துவங்குங்கள்

இறுதி தேர்வுக்கு தயார் ஆகுதல்: திட்டமிடாமல் எதனையும் சாதிக்க இயலாது. வகுப்புகள்,கூட்டங்கள்,தேர்வு,படிக்கும் நேரம்,பாட திட்டங்கள், ஓய்வு,வகுப்பறை தொடர்பான பணிகள் போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குதல், மாதிரி தேர்வுகளில் பங்கு பெறுதல், தினசரி செய்யவேண்டிய வேலைகளை பட்டியல் இடுதல் ஆகியவை அவசியம்.

முன்னுரிமை முக்கியம்: திட்டமிட்ட பணிகளை பட்டியலில் உள்ளபடி முன்னுரிமை கொடுத்து செயல் படுத்தி வெற்றி பெற வேண்டும். ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற திருக்குறளுக்கு ஏற்ப காலத்தையும், இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால் பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நேர மேலாண்மை அவசியம்: எனவே, மாணவர்கள் கனவு கண்டு அதற்கான தகுதிகளை வளர்த்துகொண்டு திட்டமிட்ட பணிகளை முன்னுரிமை கொடுத்து நேர மேலாண்மையை பயன்படுத்தி செயல் படுத்தி வெற்றி பெறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்

Friday, September 11, 2015

Quick Remedies Kill these Pests

வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் எந்த ஒரு பயனும் கிடைத்திருக்காது.

எலி 

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

ஈ 

சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

மூட்டைப்பூச்சி 

மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்துவிடும்

பல்லி 

உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

கொசுக்கள்

கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.