Tuesday, September 15, 2015

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?

கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.

"மல்லூஸ்" மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பதற்கான காரணங்கள்!!!

மேலும், இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேங்காய் எண்ணெய்

கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

மஞ்சள்
கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, அவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்

கற்றாழை

முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது

காஜல்

கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

கடலை மாவு

மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

செம்பருத்தி

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இது தான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்கு பதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்

கறிவேப்பிலை

கேரளத்து பெண்கள் பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

சிவப்பு சந்தனம்

இது தான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

சீகைக்காய்


மலையாள பெண்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தியைப் போல், சீகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.

ஆண்களே! உங்க அழகைப் பராமரிக்க சில சிம்பிள் டிப்ஸ்.

ஆண்களே! உங்க அழகைப் பராமரிக்க சில சிம்பிள் டிப்ஸ்.

பெண்கள் தான் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தற்போதைய ஆண்களும் தங்கள் அழகின் மீது அக்கறை கொண்டுள்ளனர். அதிலும் இன்றைய காலத்தில் அழகு இல்லாவிட்டால், யாரும் மதிப்பதில்லை. அக அழகைக் காண்பதற்கு பதிலாக புற அழகைத் தான் பலரும் முதலில் காண்கிறார்கள். பெண்களுக்கு ஏன் தாடி வைத்த ஆண்களைப் பிடிக்கிறது என்று தெரியுமா?
எனவே ஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள். இதனால் நீங்கள் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் தங்களின் அழகைப் பராமரிக்க நேரமில்லாதவர்களுக்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாக இருக்கும்.

ஆண்களுக்கான சில சிம்பிளான அழகு குறிப்புகள்!!

பொடுகுத் தொல்லை

நீங்கள் பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின், குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஷேவிங்கிற்கு நேரமில்லை

பல ஆண்களுக்கு காலையில் வேகமாக எழும் பழக்கமே இருக்காது. அதனால் ஷேவிங் செய்யாமல் சில நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். நீங்களும் இப்பேற்பட்டவர்களாக இருந்தால், இரவிலேயே ஷேவிங் செய்துவிட்டு தூங்குங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அதிகப்படியான மது

ஆல்கஹாலில் சர்க்கரை அதிகம் இருக்கும். இவை சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அவற்றை உடனடியாக குறைத்துக் கொள்ளுங்கள்

தூக்கமின்மை

தூக்கமின்மையால் உங்களின் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்ததும், கண்களின் மேல் சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஹேர் கட்

ஒவ்வொரு ஆணும் 2-3 வாரத்திற்கு ஒரு முறை ஹேர் கட் செய்து கொள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு முடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 3-4 வாரத்திற்கு ஒருமுறை ஹேர் கட் செய்து கொள்ளுங்கள். இதனால் முடி ஆரோக்கியம் மேம்படுவதோடு, உங்களின் தோற்றமும் மேம்படும்.

சரும வகை

சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்களைப் பயன்படுத்தும் முன், உங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களைப் பயன்படுத்தி, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தலாம். முக்கியமாக சரும வகையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற க்ரீம்களைப் பயன்படுத்தினால், அந்த க்ரீம்களின் உண்மையான பலனைப் பெறலாம்.

மாய்ஸ்சுரைசர்

பெண்கள் தான் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. மாய்ஸ்சுரைசர் என்பது ஆண், பெண் என இருவருக்கும் தயாரிக்கப்பட்டவையே. முக்கியமாக மாய்ஸ்சுரைசரின் நன்மை என்னவெனில், சருமத்தை வறட்சியடையாமல் பாதுகாக்கும். எனவே சருமம் வறட்சியடைந்து சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், மாய்ஸ்சுரைசர் ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்துங்கள். இதனால் சருமம் அழகாக இருக்கும்.