நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பைரவர்
கோவில்
ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்
இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.
ஓம் ஸ்வர்ணப்ரதாய
நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ
ஓம் பக்தப்பிரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ
செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா
கேட்டை
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத பைரவர்!!!
காரைக்குடி நகராட்சிக்கு அருகில் பள்ளத்தூர் அமைந்திருக்கிறது.பள்ளத்தூர் அருகே இருக்கும் சூரக்குடியில் தேசிகநாதர் ஆவுடைநாயகி திருக்கோவிலில் அமைந்திருக்கும் கதாயுதம் தாங்கியிருக்கும் பைரவப் பெருமானே கேட்டை நட்சத்திர பைரவர் ஆவார்.
இன்னொரு கேட்டை நட்சத்திர பைரவர் திருப்பத்தூரில் இருந்து சிவகெங்கை செல்லும் வழியில் திருக்கோட்டியூருக்கு முன்னதாக 1.6 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் திருமெய்ஞானபுரம்(T.வைரவன்பட்டி=திருக்கோட்டியூர் வைரவன்பட்டி) ஆகும்.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பாண்டிச்சேரி ஸ்ரீகாலபைரவப் பெருமான்!!!
பாண்டிச்சேரியில் விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம் வழியே செல்லும் பாதையில் திருவாண்டார் கோவில் அமைந்திருக்கிறது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வந்து இராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சகல வளங்களையும்,நலங்களையும் பெறுவர்.
திருவோண
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர்!!!
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது ஜன்ம நட்சத்திர நாட்களில் இங்கே வந்து சிவனுக்கும்,அம்பாளுக்கும் முதலில் அபிஷேகம் செய்ய வேண்டும்,முடிவில் மார்த்தாண்ட பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்யும் போது காலபைரவர் 1008 போற்றியைப் பாட வேண்டும்.
மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் பாதையில் 70 கி.மீ.தொலைவிலும்;காரைக்குடியில் இருந்து 15 கி.மீ.தொலைவிலும் வயிரவன்பட்டி அமைந்திருக்கிறது.
உத்திரம்
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைரவர்!!!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அம்மநாதர் ஆவுடையம்மன் கோவிலில் ஜடாமண்டல பைரவப் பெருமான் ஆட்சிபுரிந்து வருகிறார்.
உத்திரட்டாதி
கும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர்!!!
கரூர் மாவட்டத்தில் இருக்கும் முசிறியில் இருந்து 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் ஊர்தாத்தையங்கார்பேட்டை ஆகும்.இங்கு அமைந்திருக்கும் காசி விசுவநாதர் ஆலயத்தில் பஞ்சமுக பைரவரே ரேவதி நட்சத்திரத்தின் பிராண தேவதை ஆகும்.இவரை இங்கே பராக்கியம் பஞ்சவக்த பைரவர் என்று அழைக்கிறார்கள்.
64 பைரவ தோற்றங்களில் 52 வது பைரவத் தோற்றமே பஞ்சமுக பைரவப் பெருமான் ஆவார்.
இத்திருமேனியானது யாளி வாகனத்துடன்,ஐந்து முகங்களும் பத்து கரங்களும்,ஜ்வால கேசமும்,கோரைப்பற்களும் கொண்டு நின்ற நிலையில் அருள் பாலித்து வருகிறார்.
இவரது வலது கரங்களில் சூலம்,மழு,கத்தி,கதை,சக்கரமும் அமைந்திருக்கிறது;
இவரது இடது கரங்களில் டமருகம்,சங்கு,பாசம்,கேடயம் அமைந்திருக்கிறது.
இவரது திருமேனியில் கபாலமாலை விளங்க,இடையில் பாம்பு அரைஞாணாக சுற்றிஇருக்கிறது.இந்த கலையம்சம் மிக்க பைரவ வடிவம் மிகவும் அரிதான பைரவ வடிவம் ஆகும்.
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது பிறந்த நட்சத்திர நாட்களில் மேலே குறிபிட்ட இடங்களுக்கு வந்து வழிபட பிறவிகள் பலவற்றில் சேகரித்த கர்மாக்கள் காணாமல் போய்விடும்.
நட்சத்திரங்கள் பைரவர் அருள்தரும் தலம்
1. அசுவினி ஞானபைரவர் பேரூர்
2. பரணி மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம் க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜய பைரவர் பழனி
8. பூசம் ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர் (அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்

செய்முறை :
பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:
Post a Comment