வீட்டு மருத்துவம்
கண்ணைச் சுற்றிக் கருவளையம்:
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு
வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான
வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது
வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு
நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில்
காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
இளநரை, கண் எரிச்சல், பித்தம்:
அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை
சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில்
இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும்
வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.
படபடப்புக்கு:
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஒரு கட்டி வெல்லத்தைச்
சேர்த்துக் கொதித்ததும் இறக்கி மிதமான சூட்டில் காலை, மாலை என்று 3 நாளைக்குத்
தொடர்ந்து சாப்பிட்டால் படபடப்பு நீங்கிவிடும்.
நாக்கில் வெண்படலம் படிந்திருந்தால்:
துளிராக ஏழு அல்லது எட்டு வேப்பங்
கொழுந்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய துண்டு அதிமதுரத்தைத் தட்டி, ஒரு டம்ளர்
நீரில் வேப்பங்கொழுந்தையும் அதிமதுரத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அதை
வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்தால் ஜீரண சக்தி ஏற்படும். நாக்கில் படிந்த
வெண்படலம் மறைந்துவிடும்.
வயிற்றுப் பருமன் குறைக்க:
ஓமம் 2 ஸ்பூன், ஒரு ஸ்லைஸ் (பத்தை அல்லது கீற்று) அன்னாசியை எடுத்துக்கொள்ளவும். அன்னாசியை 3 சிறு துண்டுகளாக்கவும். இதைத் தண்ணீரில் தனித்தனியாக ஊற வைக்கவும். 20 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டையும் அந்தத் தண்ணீரை விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதை அப்படியே டம்ளரில் ஊற்றிவைக்கவும். அதில் உள்ள மேல்நீரை (தெளிந்தது) மட்டும் காலையிலும் மாலையிலும் அப்படியே இறுத்து, வடிகட்டாமல் குடிக்கவும். இதனால் வயிறு இளைக்கும்.
வீசிங்
வீசிங்குக்கு சுண்டைக்காய் வற்றலோ, உப்பு போட்ட வற்றலோ மருந்தாக உதவும். நன்றாக வறுத்துப் பொடி செய்த வற்றலில் உப்பு இல்லாவிட்டால், உப்பைச் சேர்க்கவும். சூடான சாதத்தில் பிசைந்து 3 உருண்டை சாப்பிட்டால், வீசிங்கிற்கு மட்டுமல்ல வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லது. அதேநேரம் உப்பைக் குறைவாகச் சேர்க்கவும்.
முகப் பளபளப்பு
ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.
கண் கட்டி
சிலருக்குக் கண்ணில் அடிக்கடி கட்டி வரும். சிலருக்கு நீண்ட நாள் உதிராமல், அது உபத்திரவம் கொடுக்கும். இந்தக் கட்டி உடல் சூட்டினால் வரும், அலர்ஜியாலும் வரும். கற்றாழையை எடுத்துத் தோலைச் சீவி, உள்ளே இருக்கும் சோற்றுப்பத்தையை எடுத்து நன்றாகக் கழுவி சின்னதாக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றிக் கண் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு கடுக்காயை உரைத்து, கண்ணில் படாமல் கட்டி மேலே தடவினால், பழுத்து உடைந்துவிடும்.
தலைமுடி உதிர்தல்
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை ஆகியவற்றை 1 கைப்பிடி எடுத்து, வழுவழுப்பாக அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போடவும். அதனுடன் நெல்லிமுள்ளி பொடியைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். நெய் வாசனை வரும். பிறகு கொதிக்கும் சத்தம் அடங்கியதும் எடுத்து வைக்கவும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி, தேய்த்துக் குளிக்கவும்
குழந்தைகளுக்கு

#வெயில் காலத்தில்
குழந்தைகளுக்கு முகம், கை, கால் ஆகிய உறுப்புகள் கறுத்துப் போகும், தடிப்புகளும்
வரும். இதற்குத் தீர்வாகக் குளிக்கும் முன் தயிரை எடுத்துக் குழந்தையின் முகம், கை
கால்களில் நன்றாகத் தடவி 5 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வைத்தால் முகம் பளபளப்பாக
இருக்கும். உடலும் அரிக்காமல் இருக்கும்.
#குழந்தைகளுக்கு
அடிக்கடி கால் வலி ஏற்படலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெயை எடுத்துச்
சூடுபடுத்தவும். குழந்தைகள் படுக்கப் போகும் முன் கால்களை நீட்டச் சொல்லிப்
பொறுத்துக்கொள்கிற சூட்டில் முழங்காலிலிருந்து பாதம் வரை நன்றாகத்
தேய்த்துவிட்டால், கால் வலி போகும். நன்றாகத் தூக்கம் வரும்.
#குழந்தைகளுக்குச்
சளி பிடித்தாலோ, தொண்டை கரகரப்பாக இருந்தாலோ பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1
சிட்டிகை மிளகுத் தூள் போட்டு நன்றாகக் காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து 3
நாளைக்குக் கொடுத்துவந்தால் சரியாகிவிடும்.
#பிறந்த குழந்தைகள்
கையை விட்டு இறங்காமல் அழுதால், எதற்கு அழுகிறது என்று புரியாது. வெற்றிலையில்
எண்ணெயைத் தடவி விளக்கில் காட்டவும். பிறகு அதை எடுத்துப் பொறுத்துக்கொள்கிற
சூட்டில் வயிற்றின் மேல் போட்டால் வயிற்று வலி இருந்தால் உடனே சரியாகிவிடும்.
#குழந்தைகளுக்குக்
கர்ப்பச் சூட்டினால் கண்கள் பொங்கி வரும். பூளை கட்டும். கண் சிவப்பாக இருந்தால்,
தாய்ப்பாலை இரண்டு கண்களிலும் பீய்ச்சிவிட்டால் இரண்டு நாட்களில் சரியாகிவிடும்.

No comments:
Post a Comment