Showing posts with label Fruits. Show all posts
Showing posts with label Fruits. Show all posts

Thursday, December 17, 2015

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்பது தான் கேள்வி.
அனைத்து உணவுப் பொருட்களையும் நீங்கள் ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து தான் பாதுகாக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலர் ஊறுகாயை எல்லாம் ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள்.
ஊறுகாய் காற்று புகாமல் சரியாக இறுக்கமாக மூடி வெளியில் வைத்தாலே பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இதுப் போல ஃபிரிட்ஜில் மட்டுமின்றி, சாதாரணமாகவே உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் எப்படி பாதுகாப்பதற்கான வழிகளை குறித்து இனிப் பார்க்கலாம்.....

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter)
வேர்க்கடலை வெண்ணெய் கெடாமல் இருக்க நீங்கள் அதை ஃபிரிட்ஜில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊறுகாயை போல காற்று புகாதவாறு ஓர் பாட்டிலில் அடைத்து வைத்தாலே அது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

சீஸ்
 சீஸை பாதுகாக்கவே சீஸ் பேப்பர் என்ற ஒன்று விற்கப்படுகிறது. அது இல்லையென, பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்க வேண்டாம். சாதாரணமாக காற்றுப்படும் படி வைத்தாலே சீஸ் நன்றாக இருக்கும். மனிதருக்கு மட்டுமல்ல, கெடாமல் இருக்க சீஸிற்கும் ஆக்சிஜன் தேவை. 

கரும்பு சர்க்கரை
நீர் படாதவாறு ஏதேனும் ஒரு டப்பாவில் அல்லது பாத்திரத்தில் இறுக்க மூடி வைத்தாலே போதும், கரும்பு சர்க்கரை கெடாமல் இருக்கும்.

மயோனைஸ்
க்ரில் சிக்கன் மற்றும் சண்ட்விச்களுக்கு கொடுக்கப்படும் மயோனைஸ் கெடாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைப்பது சகஜம் தான். ஆனால், அதிகமான குளுமையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். எனவே, பிரிட்ஜின் கதவு பகுதியில் வைப்பதே போதுமானது, அப்படி வைத்தாலே மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் மயோனைஸ் கெடாமல் இருக்கும்.
கோதுமை மாவு
பெரும்பாலும் கோதுமை கெடாமல் இருக்க இறுக்கமான காற்றுப்புகாத பாத்திரத்தில் இறுக்கமாக மூடி வைத்தாலே போதும். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு வைத்தாலே நான்கில் இருந்து ஆறு மாதங்கள் வரை கோதுமை மாவு கெடாமல் இருக்கும்.
சோயா சாஸ்
கருஞ்சிவப்பாக இருப்பதை வைத்து சோயா சாஸ் கெடாமல் இருப்பதை கண்டறிய முடியும். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவ்வாறு வைத்தால் சுவை குறையாது இரண்டு வருடம் வரை கெடாமல் வைத்தக் கொள்ளலாம்.

மசாலா பொருட்கள்
மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப்பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள், சோம்புப் பொடி, மிளகுத்தூள் போன்ற மசாலாப் பொருட்கள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெளியில் காற்றாட வைத்தாலே போதும். நீர் மற்றும் பூச்சி அண்டாதப் படி வைத்துக்கொள்ள வேண்டியது மட்டும் அவசியம்.
தேன்
தேனை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வாறு வைத்தால் அது கட்டியாகிவிடும். முடிந்த வரை தேனை கட்டியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அது உடல்நலத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. கலப்படம் இல்லாத தேன் வாழ்நாள் முழுக்க கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, May 21, 2014

நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!

நினைவாற்றல் அதிகரிக்க நெல்லிக்கனி!!

அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். 

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும். 

ஐந்து சுவை கொண்டது 

ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது. 

உயிர்சத்துக்கள் 

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது. 

பித்தம் தணிக்கும் 

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும். 

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி. 

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது 

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது. 

நினைவாற்றல் கூடும் 

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. 

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்