Tuesday, September 15, 2015

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!

உடனடியாகக் கறையினை போக்க...

நீங்கள் எங்காவது விருந்திற்கு சென்ற இடத்தில் ரெட் ஒயின் அல்லது தக்காளி சாஸ் கொட்டி துணியில் கறைப்படிந்துவிட்டால் பயப்படவே வேண்டாம். வீட்டிற்கு சென்றதும், துணியை கொஞ்சம் ஈரம் செய்து, அந்த கறையின் மீது கிளப் சோடாவை சேர்த்து துவைத்தால் அந்த கறை மிக எளிதில் போய்விடுமாம். வாஷிங் மெஷினில் துவைத்தால் இன்னும் நல்லது

புல் கறை

எங்காவது விளையாடும் போது அல்லது தவறியோ புல் தரையில் விழுந்து அந்த கறை சட்டையோடு ஒட்டிக்கொண்டால், உங்கள் பழைய டூத் பிரஷில் டூத் பேஸ்ட்டை (ஜெல் வகையிலான டூத் பேஸ்ட்டை தவிர்க்கவும்) பயன்படுத்தி, துணியை தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு தேய்த்து துவைதாலே புல் கறை போய்விடும்

இரத்தக் கறை

எதிர்பாராத விபத்தாக இரத்தக் கறை உங்கள் சட்டையில் ஒட்டிக்கொண்டால், முதலுதவிப் பெட்டியில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு எடுத்துக் கொள்ளவும், முதலில் நீரில் பெராக்சைடை கலந்துவிடவும். பிறகு நன்கு அலாசிய பின்பு, ஹைட்ரஜன் பெராக்சைடு கொஞ்சம் அதிகமாக கலந்து துவைக்கவும். இப்படி செய்தால் இரத்தக்கறையை எளிதாக போக்கலாம். மற்றும் பழைய உப்பை இரத்தக்கறை ஏற்பட்ட இடத்தில் உபயோகித்து துவைத்தாலும் அந்த கறையை அகற்ற முடியும்

காலர் கறை

ஆண்களின் சட்டையில் காலர் அழுக்கை அகற்றுவது பெண்களுக்கு பெரிய தொல்லையாக அமையும். ஷாம்பூவை நீரில் கலந்து துவைத்தல் எளிதாக அந்த கறையை அகற்றிவிடலாம். (இவ்வளோ ஹார்டான ஷாம்பூவ தலையில தேச்சு குளிக்கிறோமே, நம்ம தலைக்கு எந்த கேடும் வராதா என்ன? யோசிங்க பாஸ்!!!)

லிப்ஸ்டிக் கறை

ரொமான்சின் போது தவறுதலாக லிப்பு தவறி சட்டையில் பதிந்து கறை எற்பட்டுவிட்டால் (ஒருவேளை, பெரும்பாலும் குழந்தைகள் தான் அதை எடுத்து சட்டையில் கிறுக்கி கறையை ஏற்படுத்தும்) ரொட்டி துண்டுகளில் சைடு பகுதியை லிப்ஸ்டிக் கறைப் படிந்த இடத்தில் பயன்படுத்தி பிறகு மென்மையாக தேய்த்து துவைத்தல் லிப்ஸ்டிக் கறை போய்விடுமாம்

கிரீஸ் கறை

மிகவும் கடினமான மற்றும் அகற்ற முடியாத கறையாக கருதப்படுவது இந்த கிரீஸ் கறை. கவலையே வேண்டாம், கிரீஸ் கறைப் படிந்த இடத்தில் சோளமாவு சேர்த்து சிறுது நேரம் ஊற வைக்கவும். பிறகு, சாதாரணமாக துவைத்தாலே கிரீஸ் கறை போய்விடும்.

எண்ணெய் கறை
சாதாரணமாக தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை பயன்படுத்தி துவைத்தாலே எண்ணெய் கறைகளை அகற்றிவிடலாம்

இன்க் கறைகள்
மாணவர்களுக்கு பிடித்தக் கறை. அம்மாக்களுக்கு பிடிக்காதக் கறை. இன்க் கறைப் படிந்த இடத்தில ஆல்கஹால் சேர்த்து துவைத்தால் கறையை எளிதாக அகற்றி விடலாம். அப்போ அப்பாவ துவைக்க சொல்லிட வேண்டியது தானே!!!

டீக் கறைகள்

தேநீர் கறையை அகற்றுவே முடியாது என்பதெல்லாம் கட்டுக்கதை. நீரில் சர்க்கரையை கலந்து நன்கு கரைந்த பிறகு, துவைத்து எடுத்தால் தேநீர் கறையை எளிதாக அகற்றிவிடலாம்.

வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை நீக்க சில டிப்ஸ்...

மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே வந்தாலே சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும். இத்தகைய நிலையில் வெள்ளை நிற துணிகளை அணிந்து செல்லவே பயமாக இருக்கும். ஆகவே பெரும்பாலும் மழைக்காலத்தில் வெள்ளை நிற உடைகளை அணிந்து செல்லவேமாட்டார்கள்.

இருப்பினும் பள்ளிகளுக்கு குழந்தைகள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து செல்ல வேண்டி வரும். அப்படி அணிந்து செல்லும் போது, துணிகளை சேற்றுக் கறைகள் படிந்தால், கவலைப்பட வேண்டாம். இங்கு வெள்ளை நிறத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளைப் போக்குவது எப்படி என்று பார்ப்போம்.

டிடர்ஜெண்ட்

சேற்றுக் கறைப் படிந்த வெள்ளைத் துணிகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரில் டிடர்ஜெண்ட் பவுடரைப் போட்டு, கறைப் படிந்த துணிகளை நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து அலசினால், கறைகள் அகலும்.

வினிகர்

வினிகரைப் பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் துணிகளில் படிந்த கறைகளைப் போக்க வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதில் துணியை ஊற வைத்து நன்கு தேய்த்து அலச வேண்டும்

பேக்கிங் சோடா

வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை போக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரை ஒன்றாக கலந்து, அதனை கறை படிந்த இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து குளிர்ந்த நீரில் அலசினால், சேற்றுக் கறைகள் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை கடினமான சேற்றுக் கறைகளையும் எளிதாகப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் கறைப்படிந்த துணியை ஊற வைத்து பின் தேய்த்து துவையுங்கள். இல்லாவிட்டால், ஒரு அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் கறைப்படிந்த துணியையும் சேர்த்து சிறிது நேரம் கழித்து தேய்த்தால், சேற்றுக் கறைகள் அகன்றுவிடும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு

 1 கப் நீரில், 1/2 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, 1/2 கப் பேக்கிங் சோடா மற்றும் 1/2 கப் வினிகர் சேர்த்து கலந்து, பின்பு அதில் சிறிது டிடர்ஜெண்ட் பவுடர் சேர்த்து, பின் அதில் சேற்றுக் கறை படிந்த வெள்ளைத் துணியை 1 மணிநேரம் ஊற வைத்து தேய்த்து அலசினால், கறைகளை போய்விடும்.

No comments:

Post a Comment