Showing posts with label Washing. Show all posts
Showing posts with label Washing. Show all posts

Tuesday, September 15, 2015

பேக்கிங் சோடாவை கொண்டு வீட்டை சுத்தப்படுத்தும் சில டிப்ஸ்

பேக்கிங் சோடாவை கொண்டு வீட்டை சுத்தப்படுத்தும் சில டிப்ஸ்


இப்போது அதற்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது. அது தான் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடாவில் கிருமிநாசினி குணங்கள் உள்ளது. கூடுதலாக குளிர்ச்சியான குமிழ் உண்டாக்குகிற தன்மையும் உள்ளது. அமிலத்துடன் சேரும் போது தான் இதிலிருந்து நுரை ஏற்படும்.

கெட்ட வாடைகளை பேக்கிங் சோடாவை கொண்டு எப்படி நீக்குவது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாமா? இதோ 10 வகையான வாடைகளும்... அதை போக்கும் வழிகளும்...

கப்படிக்கும் கழிப்பறை
வீட்டை சுத்தப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் டிப்ஸ் பற்றி உங்களிடம் கூறாமல் இருப்பதற்கு காரணம் உள்ளது - ஆமாம், அந்த விஷயம் தெரிந்து விட்டால் உங்கள் அவர்கள் இனி தேவைப்பட மாட்டார்கள் அல்லவா? கழிப்பறையை சுத்தப்படுத்த, முதலில் கோப்பையை தண்ணீர் ஊற்றி கழுவவும். பின் அதனுள் ஒரு கப் பேக்கிங் சோடாவை போட்டு, அதன் மூடியை மூடி விடவும். அதன் நுரையே கறைகளை தேய்க்கும். ஒரு மணிநேரம் கழித்து, நீரை ஊற்றி கழுவவும்.

துர்நாற்றம் வீசும் பூனை இருக்கும் அறை
பூனைகள் மிகவும் நாற்றம் பிடித்த மிருகங்கள்; குறிப்பாக அறைகளில் அவைகள் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போது. எப்போதாவது பூனை அசிங்கப்படுத்திய அறையை அல்லது இடத்தை கழுவியுள்ளீர்களா? அதை விட பெரிய கொடுமை இருக்க முடியாது. இந்த அவஸ்தையை அனுபவித்தவர்களுக்கே அந்த கஷ்டம் புரியும்.

கவலையை விடுங்கள்! உங்கள் கஷ்ட காலம் எல்லாம் போய் விட்டது. பூனை இருக்கும் அறைக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு கை பேக்கிங் சோடாவை எடுத்து, அந்த அறையில், பூனை அசிங்கப்படுத்திய இடங்களில் தினமும் காலையில் தூவி விடுங்கள். இது உங்களையோ அல்லது பிராணியையோ எந்த விதத்திலும் பாதிக்காது. அதன் வாசனையும் அதிகமாக இருக்காது. சரி எவ்வளவு தூவ வேண்டும்? முதலில் 1/4 கப் மட்டும் தூவுங்கள். பின் அறையை விட்டு வெளியேறுங்கள். இன்னமும் வாடை அடித்தால், இன்னொரு 1/4 கப் சேர்த்துக் கொள்ளுங்கள். வாடை கண்டிப்பாக நீங்கும். ஆனால் ஒரு முறை செய்தால் வாழ்நாள் முழுவதும் வாடை மீண்டும் வராது என்றெல்லாம் இல்லை.

வாடையடிக்கும் கூலர் மற்றும் ப்ளாஸ்க்
இந்த இரண்டு வகையான பாட்டில்களிலும் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை நிரப்புங்கள். ப்ளாஸ்க் என்றால் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் 3 கப் தண்ணீர் கலந்திடவும். இதனை கலந்து 20 நிமிடங்களுக்கு ப்ளாஸ்க்கை அப்படியே வைத்து விடுங்கள். பின் அலசுங்கள். இதுவே கூலர் என்றால், பாட்டில் முழுவதும் தண்ணீரை நிரப்பி அதனுடன் ½ கப் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும். அதனை மூடி விட்டு, ஒரு மணிநேரம் கழித்து அலசவும்.

கெட்ட நாற்றத்தை
கொண்ட வாய்க்கால் கெட்ட நாற்றத்தை கொண்ட வாய்க்காலில் ஒரு வாரத்திற்கு சில டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தினமும் சில முறை போடவும். ஒரு மணிநேரம் கழித்து, அதன் மீது வெந்நீரை சற்று நேரம் ஊற்றவும். சிறிது நேரத்திலேயே வாடை நீங்கி விடும்.

வேக்யூம் கிளீனரில் இருந்து வரும் துர்நாற்றம்
பூனை அசுத்தம் செய்த அறையை சுத்தப்படுத்தி விட்டீர்களா? இனி அது உங்கள் ஹாலில் உங்கள் கார்பெட் மீது அசுத்தம் செய்தால் என செய்வீர்கள்? மீண்டும் பேக்கிங் சோடா தான் உங்களுக்கு கை கொடுக்கும். அதனை கார்பெட் மீது தூவவும். அது சிறிது நேரத்திற்கு கார்பெட் மீது இருக்கட்டும். ஒரு மணிநேரத்திற்கு பின் அதன் மீது வேக்யூம் கிளீனரை வைத்து சுத்தப்படுத்துங்கள். இதனால் கார்பெட் மட்டுமல்லாது வேக்யூம் கிளீனரும் சுத்தமாகும்.

வாடையடிக்கும் ஷூக்கள்
1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஷூக்களின் மீது தூவுங்கள். டென்னிஸ் ஷூக்களை வாஷிங் மெஷினில் போட்டு கழுவலாம் தான். அதன் பின் பேக்கிங் சோடா போட்டு கழுவினால் முழுமையாக வாடை இல்லாமல் இருக்கும்.

துர்நாற்றம் வீசும் குளிர் சாதனப்பெட்டி
மிகவும் சுலபமானது இது. அரை கப் பேக்கிங் சோடாவை ஒரு கிண்ணத்தில் போடவும். அந்த கிண்ணத்தை குளிர் சாதனப்பெட்டியில் வைத்திடவும். பழைய உணவுகளினால் ஏற்படும் வாடையை இது நீக்கும். முதலில் இதை செய்யுங்கள்.

வெங்காயம் நறுக்கிய பிறகு வாடையடிக்கும் கைகள்
வெங்காயம் என்ற அபூர்வ உணவை பற்றியும், புற்று அணுக்களை அழிக்கும் அதன் திறனை பற்றியும், நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனை அதிகமாக உண்ணுவதற்கு பல காரணங்கள் உள்ளது. வெங்காயத்தை நறுக்கிய பிறகு, சில டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் நீரில் போடவும். உங்கள் கைகளை அதை கொண்டு கழுவவும். அதன் பின் கைகளை கழுவ மறந்து விடாதீர்கள்.

மீட்டிங் செல்வதற்கு முன்பு பயமுறுத்தும் வாய் துர்நாற்றம்
வெங்காயங்கள் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு, சிறந்த மௌத் வாஷைக் கொண்டு உங்கள் வாயை அலசும் நேரம் வந்துவிட்டது. அந்த மௌத் வாஷ் வேறு எதுவும் அல்ல; அது தான் பேக்கிங் சோடாவுடன் கலக்கப்பட்ட தண்ணீர். இதனை வாயில் ஊற்றி வாய் முழுவதும் சில நிமிடங்களுக்கு சுழற்றவும். இதனால் உங்கள் வாயில் அடிக்கும் துர்நாற்றம் நீங்கும். அதனை விழுங்கி விடாமல் வெளியே துப்பி விடுங்கள்.

அக்குளில் இருந்து வரும் வாடை
அக்குள் வாடையை போக்க இயற்கையான டியோடரண்ட் வேண்டுமானால், ½ கப் பேக்கிங் சோடாவை உங்களுக்கு பிடித்தமான அதிமுக்கிய எண்ணெய் 6 சொட்டுக்களை கலந்திடவும். இந்த அதிமுக்கிய எண்ணெய் உண்ணத்தக்க வகையில் இருக்க வேண்டும்; செயற்கை சேர்க்கம் இருக்கக் கூடாது. லாவெண்டர், ரோஸ், ஒய்லாங் ஒய்லாங் அல்லது தோட்ட செடி வகை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏன் இவையனைத்தையும் கூட ஒன்றாக கலக்கலாம். அதனை கலந்து ஒரு பெர்ஃப்யூம் ஜாடியில் போட்டு வைக்கவும். இதனை உங்கள் பையில் ஒரு ப்ரஷ்ஷுடன் வைத்துக் கொள்ளவும். பேக்கிங் சோடா வாடையை நீக்குவது மட்டுமல்லாது சிக்கனமானதும் கூட. புதுமையாக யோசியுங்கள். உங்களுக்காக பேக்கிங் சோடா பலவற்றை செய்யும்.

லெக்கிங்ஸ் துவைக்க சில டிப்ஸ்...

லெக்கிங்ஸ் துவைக்க சில டிப்ஸ்...


1. லெக்கிங்ஸ்-ஐ கைகளில் துவைப்பதே சிறந்தது. முதலில் டிடர்ஜென்டை தண்ணீரில் கரைத்து, அதில் அந்த துணியைப் போட்டு, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துவைக்க வேண்டும்.

2. பிரஸ் போட்டு துவைக்கக் கூடாது. இதனால் துணியானது பாதிப்படைவதோடு, அதன் எலாஸ்டிக் தன்மையும் போய்விடும். ஆகவே கைகளிலேயே அழுக்கினை தேய்க்க வேண்டும்.

3. லெக்கிங்ஸ் துவைக்கும் போது, தண்ணீர் போன்று இருக்கும் டிடர்ஜென்டையே பயன்படுத்த வேண்டும்.

4. லெக்கிங்ஸ்-இல் கரை ஏதேனும் இருந்தால், முதலில் தண்ணீரில் அலச வேண்டும். பிறகு சிறிது எலுமிச்சை சாற்றை தண்ணீரில் விட்டு, கரை உள்ள துணியை 10 நிமிடம் அதில் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

5. எப்போது லெக்கிங்ஸ்-ஐ சுடு தண்ணீரில் அலசக் கூடாது. துணியின் நீண்டு சுருங்கும் தன்மை கெடாமல் இருக்க வேண்டும் என்றால், துணியை குளிர்ந்த நீரிலேயே அலச வேண்டும்.

6. துணியை துவைத்து காயப் போடும் முன், அதனை ஏதேனும் ஒரு கண்டிசனரில் நனைத்து காயப் போட வேண்டும். அதனால் துணியின் தரமானது பாதுகாக்கப்படும்.

7. லெக்கிங்ஸில் கரைகள் ஏதேனும் இருந்தால், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து கரை இருக்கும் இடத்தில் தேய்க்கவும். ஏனெனில் லெக்கிங்ஸ்-ஐ அடிக்கடி துவைக்கக் கூடாது. இல்லையென்றால் அதன் எலாஸ்டிக் போய்விடும். ஆகவே இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு லெக்கிங்ஸ்-ஐ துவைத்தால், நீண்ட நாட்கள் புதுசு போல் இருக்கும்.

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!

உடனடியாகக் கறையினை போக்க...

நீங்கள் எங்காவது விருந்திற்கு சென்ற இடத்தில் ரெட் ஒயின் அல்லது தக்காளி சாஸ் கொட்டி துணியில் கறைப்படிந்துவிட்டால் பயப்படவே வேண்டாம். வீட்டிற்கு சென்றதும், துணியை கொஞ்சம் ஈரம் செய்து, அந்த கறையின் மீது கிளப் சோடாவை சேர்த்து துவைத்தால் அந்த கறை மிக எளிதில் போய்விடுமாம். வாஷிங் மெஷினில் துவைத்தால் இன்னும் நல்லது

புல் கறை

எங்காவது விளையாடும் போது அல்லது தவறியோ புல் தரையில் விழுந்து அந்த கறை சட்டையோடு ஒட்டிக்கொண்டால், உங்கள் பழைய டூத் பிரஷில் டூத் பேஸ்ட்டை (ஜெல் வகையிலான டூத் பேஸ்ட்டை தவிர்க்கவும்) பயன்படுத்தி, துணியை தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு தேய்த்து துவைதாலே புல் கறை போய்விடும்

இரத்தக் கறை

எதிர்பாராத விபத்தாக இரத்தக் கறை உங்கள் சட்டையில் ஒட்டிக்கொண்டால், முதலுதவிப் பெட்டியில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு எடுத்துக் கொள்ளவும், முதலில் நீரில் பெராக்சைடை கலந்துவிடவும். பிறகு நன்கு அலாசிய பின்பு, ஹைட்ரஜன் பெராக்சைடு கொஞ்சம் அதிகமாக கலந்து துவைக்கவும். இப்படி செய்தால் இரத்தக்கறையை எளிதாக போக்கலாம். மற்றும் பழைய உப்பை இரத்தக்கறை ஏற்பட்ட இடத்தில் உபயோகித்து துவைத்தாலும் அந்த கறையை அகற்ற முடியும்

காலர் கறை

ஆண்களின் சட்டையில் காலர் அழுக்கை அகற்றுவது பெண்களுக்கு பெரிய தொல்லையாக அமையும். ஷாம்பூவை நீரில் கலந்து துவைத்தல் எளிதாக அந்த கறையை அகற்றிவிடலாம். (இவ்வளோ ஹார்டான ஷாம்பூவ தலையில தேச்சு குளிக்கிறோமே, நம்ம தலைக்கு எந்த கேடும் வராதா என்ன? யோசிங்க பாஸ்!!!)

லிப்ஸ்டிக் கறை

ரொமான்சின் போது தவறுதலாக லிப்பு தவறி சட்டையில் பதிந்து கறை எற்பட்டுவிட்டால் (ஒருவேளை, பெரும்பாலும் குழந்தைகள் தான் அதை எடுத்து சட்டையில் கிறுக்கி கறையை ஏற்படுத்தும்) ரொட்டி துண்டுகளில் சைடு பகுதியை லிப்ஸ்டிக் கறைப் படிந்த இடத்தில் பயன்படுத்தி பிறகு மென்மையாக தேய்த்து துவைத்தல் லிப்ஸ்டிக் கறை போய்விடுமாம்

கிரீஸ் கறை

மிகவும் கடினமான மற்றும் அகற்ற முடியாத கறையாக கருதப்படுவது இந்த கிரீஸ் கறை. கவலையே வேண்டாம், கிரீஸ் கறைப் படிந்த இடத்தில் சோளமாவு சேர்த்து சிறுது நேரம் ஊற வைக்கவும். பிறகு, சாதாரணமாக துவைத்தாலே கிரீஸ் கறை போய்விடும்.

எண்ணெய் கறை
சாதாரணமாக தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை பயன்படுத்தி துவைத்தாலே எண்ணெய் கறைகளை அகற்றிவிடலாம்

இன்க் கறைகள்
மாணவர்களுக்கு பிடித்தக் கறை. அம்மாக்களுக்கு பிடிக்காதக் கறை. இன்க் கறைப் படிந்த இடத்தில ஆல்கஹால் சேர்த்து துவைத்தால் கறையை எளிதாக அகற்றி விடலாம். அப்போ அப்பாவ துவைக்க சொல்லிட வேண்டியது தானே!!!

டீக் கறைகள்

தேநீர் கறையை அகற்றுவே முடியாது என்பதெல்லாம் கட்டுக்கதை. நீரில் சர்க்கரையை கலந்து நன்கு கரைந்த பிறகு, துவைத்து எடுத்தால் தேநீர் கறையை எளிதாக அகற்றிவிடலாம்.

வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை நீக்க சில டிப்ஸ்...

மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே வந்தாலே சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும். இத்தகைய நிலையில் வெள்ளை நிற துணிகளை அணிந்து செல்லவே பயமாக இருக்கும். ஆகவே பெரும்பாலும் மழைக்காலத்தில் வெள்ளை நிற உடைகளை அணிந்து செல்லவேமாட்டார்கள்.

இருப்பினும் பள்ளிகளுக்கு குழந்தைகள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து செல்ல வேண்டி வரும். அப்படி அணிந்து செல்லும் போது, துணிகளை சேற்றுக் கறைகள் படிந்தால், கவலைப்பட வேண்டாம். இங்கு வெள்ளை நிறத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளைப் போக்குவது எப்படி என்று பார்ப்போம்.

டிடர்ஜெண்ட்

சேற்றுக் கறைப் படிந்த வெள்ளைத் துணிகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரில் டிடர்ஜெண்ட் பவுடரைப் போட்டு, கறைப் படிந்த துணிகளை நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து அலசினால், கறைகள் அகலும்.

வினிகர்

வினிகரைப் பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் துணிகளில் படிந்த கறைகளைப் போக்க வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதில் துணியை ஊற வைத்து நன்கு தேய்த்து அலச வேண்டும்

பேக்கிங் சோடா

வெள்ளைத் துணிகளில் படிந்த சேற்றுக் கறைகளை போக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரை ஒன்றாக கலந்து, அதனை கறை படிந்த இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து குளிர்ந்த நீரில் அலசினால், சேற்றுக் கறைகள் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை கடினமான சேற்றுக் கறைகளையும் எளிதாகப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் கறைப்படிந்த துணியை ஊற வைத்து பின் தேய்த்து துவையுங்கள். இல்லாவிட்டால், ஒரு அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் கறைப்படிந்த துணியையும் சேர்த்து சிறிது நேரம் கழித்து தேய்த்தால், சேற்றுக் கறைகள் அகன்றுவிடும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு

 1 கப் நீரில், 1/2 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, 1/2 கப் பேக்கிங் சோடா மற்றும் 1/2 கப் வினிகர் சேர்த்து கலந்து, பின்பு அதில் சிறிது டிடர்ஜெண்ட் பவுடர் சேர்த்து, பின் அதில் சேற்றுக் கறை படிந்த வெள்ளைத் துணியை 1 மணிநேரம் ஊற வைத்து தேய்த்து அலசினால், கறைகளை போய்விடும்.