ஐந்து நாட்கள் செய்ய வேண்டிய டீடாக்ஸ் டிரிங்க் டயட்
- முதல் நாள் எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
- இரண்டாவது நாள், நெல்லிச் சாற்றை அருந்தலாம்.
- மூன்றாவது நாள், சாத்துகுடிச் சாற்றைக் குடிக்கலாம்.
- நான்காவது நாள், திராட்சை சாற்றைக் குடிக்க வேண்டும்.
- ஐந்தாவது நாள், அன்னாசிப்பழ சாற்றை அருந்தி, டயட்டை முடித்துக்கொள்ளலாம
- தொடர்ச்சியாக இந்த ஐந்து நாட்களுக்கு இந்த ஐந்து சாறுகளை அருந்துவதே டீடாக்ஸ் டிரிங்க் டயட்.
உச்சி முதல்
பாதம் வரை கிளென்சிங்
கூந்தல்: கரிசலாங்கண்ணி
மற்றும் கறிவேப்பிலை
சாப்பிடுவது, குப்பைமேனியைக்
கூந்தலில் பூசுவது, சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது போன்றவை கூந்தலைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக்கும்.
ஸ்கால்ப் (மண்டைத் தோல்): மண்டைத் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பூசலாம். மருத்துவ எண்ணெய்களை மருத்துவர் உதவியோடு பயன்படுத்தலாம். ஊறவைத்த வெந்தயக் குடிநீரை வாரம் மூன்று முறை குடிக்கலாம்.
மூளை: வால்நட், மீன், முட்டை, தானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
கண்கள்: பொன்னாங்கண்ணி,
பாதாம், கேரட் ஜூஸ், கேரட் ஆகியவற்றைத்
தினமும் சாப்பிடலாம்.
சருமம்: பப்பாளி, மா, கேரட், சிட்ரஸ் பழங்கள், மாதுளை ஆகியவற்றைச்
சாப்பிடலாம்.
உதடு: வெள்ளரி, பீட்ரூட் சாறு, புதினா ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உணவுக்குழாய்: காரம், எண்ணெய் குறைந்த உணவுகள், நெய், கேரட் ஆகியவற்றைச்
சாப்பிடலாம்.
இதயம்: தாமரைத்தண்டு,
செம்பருத்தி, பிளாக்ஸ் விதைகள், நல்லெண்ணெய், பாதாம் ஆகியவை நல்லது.
நுரையீரல்: அகத்திக்கீரை,
முள்ளங்கி, திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்
வயிறு: வெண்பூசணி, நீர் மற்றும் நார்ச்சத்துள்ள
உணவுகள், முட்டைகோஸ் போன்றவை நல்லது.
கல்லீரல்: கொத்தமல்லி, நெல்லி, கீழாநெல்லி, சிட்ரஸ் பழங்கள், மோர், கரிசாலை, பச்சை நிறக் காய்கனிகள் ஆகியவை கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல்: தண்ணீர், காளான், கேரட் ஆகியவை நல்லது.
கணையம்: ஊறவைத்த வெந்தயம், கொய்யா, மாதுளை சாத்துக்குடி ஆகியவை நல்லது.
சிறுநீரகம்: தாமரைத்தண்டு,
பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், சின்ன வெங்காயம், வாழைத்தண்டுச் சாறு, நீர்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றைச்
சாப்பிடலாம்.
சிறுகுடல், பெருங்குடல்: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள், கீரைகள், இஞ்சி, மோர், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பச்சை, மஞ்சள், சிவப்புக் காய்கனிகள் நல்லது.
கர்ப்பப்பை: கற்றாழை, செம்பருத்திப் பூ, பாதாம், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்
எலும்பு: பால், கேழ்வரகு, சிறுதானியம், கொய்யா, நட்ஸ், எள் சாப்பிடலாம்.
நரம்பு: கசப்புச் சுவைகொண்ட உணவுகள், வாழைப்பழம், மூலிகை ஆகியவை நல்லது.
ரத்தம்: சிவப்பு நிற உணவுகள், பேரீச்சை, காய்ந்த திராட்சை, கேரட் ஜூஸ், சுண்டல் சாப்பிடலாம்.
டீடாக்ஸ் என்பதை மருத்துவ சிகிச்சையாகக் கருதாமல், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, நமது பழக்கவழக்கங்களில் ஒன்றாக்கிக்கொண்டாலே, நம் உடலும் மனமும் புத்துணர்வாகி, ஆரோக்கியத்துடன்
இருக்கும். டீடாக்ஸ் செய்வோம் நம்முள் மலர்ந்து, புத்துணர்வு பெறுவோம்.