Tuesday, October 27, 2015

டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்

டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்
கபாலபாதி
சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக வெளியில்விட வேண்டும். இதில், மூச்சை உள் இழுப்பதற்கு எந்தவிதக் கவனமும் செலுத்த வேண்டாம். அது இயற்கையாகவே நிகழும். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். சத்தத்தை அடக்கிவைக்கத் தேவை இல்லை.
வஸ்திரிகா
சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக இழுத்து, வேகமாக வெளியில் விடலாம். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.குறிப்பு: ரத்த அழுத்தப் பிரச்னை, ஆஸ்துமா, பைபாஸ் சர்ஜரி செய்தோர் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: இந்த இரண்டு மூச்சுப் பயிற்சிகளும் நுரையீரல், மூக்கு, சுவாசப்பாதை, வயிறு ஆகியவற்றைச் சுத்தம் செய்யும். இந்தப் பயிற்சிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்
கபாலபாதி
சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக வெளியில்விட வேண்டும். இதில், மூச்சை உள் இழுப்பதற்கு எந்தவிதக் கவனமும் செலுத்த வேண்டாம். அது இயற்கையாகவே நிகழும். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். சத்தத்தை அடக்கிவைக்கத் தேவை இல்லை.
வஸ்திரிகா
சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக இழுத்து, வேகமாக வெளியில் விடலாம். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.
குறிப்பு: ரத்த அழுத்தப் பிரச்னை, ஆஸ்துமா, பைபாஸ் சர்ஜரி செய்தோர் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: இந்த இரண்டு மூச்சுப் பயிற்சிகளும் நுரையீரல், மூக்கு, சுவாசப்பாதை, வயிறு ஆகியவற்றைச் சுத்தம் செய்யும். இந்தப் பயிற்சிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
டீடாக்ஸ் ஆசனங்கள்...
போட் ரைடிங்
காலை நீட்டி உட்கார வேண்டும். பின்புறம் சாய்ந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கைகளைத் துடுப்பு போல கடிகாரத் திசையில் (கிளாக் வைஸ்) சுழற்ற வேண்டும். (சுழற்றும்போது, கையின் கட்டைவிரல்களை உட்புறம் வைத்து மடித்துக்கொள்ளவும்) பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே எதிர் கடிகாரத் திசையில் (ஆன்டி க்ளாக்வைஸ்) சுழற்ற வேண்டும். இரண்டையும் தலா 10 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு: முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், காய்ச்சல் வந்தோர், மாதவிலக்கு நேரத்தில் இருப்பவர்கள் செய்யக் கூடாது.
பலன்கள்: உடல் எடை குறையும். கல்லீரல் சுத்தமாகும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். சர்க்கரை நோயாளிகள் அவசியம் செய்யலாம். உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, சிறந்த பயிற்சி இது. கெட்ட கொழுப்பு நீங்கும்.
டைனமிக் ஸ்பைனல் ட்விஸ்ட்
காலை நீட்டி ‘V’ போல பரப்பிக்கொள்ளவும். கைகளை நேராக நீட்டிக்கொள்ளும்போது மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். வலது பக்கம் உடலை வளைத்து, வலது காலைத் தொடும்போது, மூச்சை விடவும். மீண்டும் மூச்சை இழுத்தபடி நேர் நிலைக்கு வந்து, இடது பக்கம் வளைந்து,  இடது காலைத் தொடும் போது மூச்சை விடவும். இது, ஆங்கில எழுத்து ‘X’ போன்ற வடிவமாகத் தெரியும். இந்தப் பயிற்சியை இருபுறமும் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு: கர்ப்பக் காலம், காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.
பலன்கள்: முதுகு வலி சரியாகும். தொடை, வயிற்றுப் பகுதி உறுதியாகும். வயிறு ட்விஸ்ட் ஆவதால், கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் இயக்கம் பெற்று, அந்தப் பகுதிகளில் உள்ள கழிவுகள் வெளியேறும். அடிவயிறு சுத்தமாகும்.
ஃபார்வேர்ட் பெண்டிங்
காலை மடக்கி அதன் மேல் உட்காரவும். பாதங்களை ‘V’ போல விரித்து உட்கார்ந்தால், வலி தெரியாது. காலின் வலது கட்டைவிரல் இடது கட்டைவிரலின் மேல் பதிய வேண்டும். இதுதான் வஜ்ராசனம் போஸ். கையின் கட்டைவிரலை உள்வைத்து மூடி, தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் மேல் வைத்து, முன்பக்கம் குனிய வேண்டும். எழுந்திருக்கும்போது மூச்சை இழுக்கவும். வஜ்ராசன நிலைக்கு வந்த பின், மூச்சை விட்டுவிடவும்.
குறிப்பு: அடிஇறக்கம், பைல்ஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்போர் தவிர்க்கவும். காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் செய்யக் கூடாது.

பலன்கள்: அடிவயிறு அழுத்தப்படுவதால், செரிமானம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மாதவிலக்குப் பிரச்னை சீராகும். தொப்பை கரையும். கெட்ட கொழுப்பு வெளியேறும். உடல் பருமன் குறையும்.

No comments:

Post a Comment