இயற்கை மருத்துவத்தில் டீடாக்ஸ்!
- கீரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவசியம் சாப்பிடவும்.
- ஒரு நாளைக்கு மூன்று நிறக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.
- காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுந்திருப்பது நல்லது.
- காலை மூன்று முதல் ஐந்து மணி நுரையீரலின் நேரம், என்பதால் சாப்பாடு இல்லாத உடலாக இருப்பதால், சுத்தமான காற்றை கிரகித்துக்கொள்ள உதவியாக இருக்கும். சீரான எண்ணங்கள் தோன்றும். மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். அந்த நாளே உற்சாகமாக மாறும். மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
- காலை ஐந்து முதல் ஏழு மணி பெருங்குடலின் நேரம், ஒவ்வொரு மனிதனும் ஏழு மணிக்குள் மலம் கழித்துவிட வேண்டும். முதல் நாள் சேர்த்துவைத்த கழிவுகள் வெளியேறிவிட்டால், உடல் சுத்தமாகிவிடும்.
- காலை ஏழு முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவை எடுத்தாக வேண்டும். உணவின் நேரம் தவறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதுபோல மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும்.
- தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது நல்லது.
- ஆழ்ந்த தூக்கம் இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை இருப்பதாக அமைத்துக்கொள்வது, பல நோய்களை வராமல் தடுக்கும். இந்த நேரம் கல்லீரல் மற்றும் பித்தப்பையின் நேரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தூங்குவது முக்கியம்.
உடலில் கழிவுகள்
சேராமல் தடுக்க...
- சிறுதானியம், கோதுமை, தவிடு நீக்கப்படாத அரிசி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
- பயறு, காய்கறி, கனி வகைகள், தானியங்கள் ஆகியவற்றைச் சுழற்சிமுறையில் சாப்பிடலாம்.
- ரவை, மைதா, வெள்ளைச் சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். ரவை, சேமியா ஆகியவற்றில் எண்ணெய் சேர்த்து, உணவைத் தயாரிக்கக் கூடாது.
- எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.
- உணவைச் செக்கில் ஆட்டிய எண்ணெயால் சமைப்பது உடலுக்கு நல்லது.
எண்ணெய் குளியல்
- வாரம் ஒருமுறை நல்லெண்ணெய், ஷீராபலா தைலம், ஏலாதித் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். கண்களுக்குக் குளிச்சியைத் தரும். நல்ல தூக்கம் வரும். அன்று நாள் முழுவதும் லேசான உணவுகளைச் சாப்பிடலாம். இதுவே, உடலில் உள்ள ஆற்றலைப் புதுப்பிக்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
- நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு தட்டிப்போட்டு, லேசாகச் சூடு செய்து, முதலில் உடல், பின் தலைமுடி எனப் பூசிய, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.
- சாதாரண ஹெட் பாத் இருமுறை எடுக்கலாம்.
- பலாஅஸ்வனகந்தித் தைலம் (மருத்துவ மூலிகைகள் கொண்ட நல்லெண்ணெய் இது) போன்ற எண்ணெயை, உடல் முழுதும் 20 நிமிடங்கள் பூசிய பின் குளிக்கலாம்.
No comments:
Post a Comment